பிளாக்கன் எழுதியவை | ஜூன் 5, 2009

என் ஆறாவது பதிவும் முப்பத்திரெண்டு கேள்வி – பதில்களும்..!

து என்னோட ஆறாவது பதிவு.. அவனவ 50 -ங்கிறா 100- ங்கிறா அதுதான் நானும் என்னோட பதிவ  ஆறுன்னு போட்டுட்டேன் சின்ன சேஞ்சுக்குத்தேன்.. ஆறின்ன ஏத்துக்க மாட்டீங்களா…….

ஆறுன்ன சும்மா இல்லீங்க.. ரெம்ப அற்புதமான நம்பருங்க. தமிழ் சினிமா கூட ஆறுன்னு வந்திருக்குது.

32  கேள்வி ன்னு ஒரு பதிவு போடுறாங்க. என்னையும் கூப்பிடுவாங்கன்னு பார்த்தேன். கூப்பிட மாட்டேங்குறாங்க. அவங்க ஒரு டீம்மா இருக்குறாங்க போல இருக்கிது அதான் கூப்பிட மாட்டேங்கிறாங்க.

இல்லேன்ன ரெம்ப நாளா பிளாக் எழுதுறவங்கள மட்டும் தான் அழைப்பானுங்க போல இருக்கு. சரி யின்ன பண்ணூறது.

ஏப்பா ராசாக்களா நல்லாத்தான் எழுதுறீங்க கொஞ்சம் . புதுசா பிளாக் எழுத வர்றவங்களையும் அழைக்கலாமில்லா. சரி என்னத்த சொல்ல பிளாக்கன் எத சொன்னாலும் திட்டுற மாதிரியே நினைக்கிறாங்க…………..

இந்தப் பதிவோட மகத்துவம் தெரிஞ்சாவுது ப்ளாக் எழுத வர்ற புது பசங்களையும் இந்தத் தொடர் பதிவு எழுத கூப்பிடுங்க சாமிங்களா!

சரி என்னோட ஆறாவது பதிவையும் 32 கேள்விக்கான பதிலயும் படிச்சுப் பார்த்திட்டு எப்படி இருக்கின்னு சொல்லுங்க.
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

  ஏப்பா பிளாக்கில இம்சை பன்னுறவனுங்கள சூட் பன்னுறமில்லா அதனால தான் இந்த பேரு வந்திச்சு. பிடிக்காமலா பேரு வச்சிக்கிட்டு அலைவானுக. என்னப்பா கேள்வி கேக்குற.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

  கேள்வியே தப்புய்யா… யின்ன கொஸ்டின் கேக்குறா. பிளாக்கன் அழ மாட்டான். அம்புட்டுப் பயலுகளையும் அழத்தான் வைப்பான்.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

   எனக்கு மட்டுமில்ல, என்னோட பிளாக்க படிக்கிற அம்புட்டு பஏருக்கும் பிடிக்கும். நாங்க நல்ல ஃபாண்டு யூஸ் பண்ணுறமில்லா.

4. பிடித்த மதிய உணவு என்ன?

  ஓசியில என்ன வாங்கிக் குடுத்தாலும் எனக்கு பிடிக்கும். நீங்க வேணுமின்ன  ஓசியில பிரியாணி வாங்கிக்குடுத்துப் பாருங்க… அதுக்கப்புறம் தெரியும்.

5 நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா?

அம்புட்டும் பேரும் என்ன பார்த்தாலே துண்டக் காணோம் துனியக்கானோமின்னு ஓடுறானுவ எப்படி நட்பு வைக்க முடியும்.

6. கடலில் குளிக்க பிடிக்குமா….அருவியில் குளிக்க பிடிக்குமா?

இரண்டும் அல்ல பிளாக்கன் பாத்ரூமில தேன் குளிப்பான்.   

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

     ஆணாக இருந்தால் பாக்கெட். பெண்ணாக் இருந்தாலும் பாக்கெட்.. பணம் தானப்பா முக்கியம்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

     சுட்டு பிளாக் எழுதுறவன வறுக்கிற மனசு பிடிக்கும்…  யாராவது பாராட்டினா கண்டுக்கமாட்டமில்ல அதுப்பா

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

      ஏய்யா ஒரு கட்ட பிரமச்சாரிக்கிட்ட கேக்குறா மாதிரியாய்ய கொஸ்டின் கேக்குறா. சரி ஒகே. இத தூக்கி கிடாசு…

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

     க்டவுள் தேன். இருந்தாருன்ன நன்ன இருக்கும்

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

     பிளாக்கு

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

 கீ போடில டைப் பன்னும் போது வர்ற சவுண்டையும், மானிட்டரையும் பாத்திக்கிட்டிருக்கேன்.

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

  பிளாக்கு

14. பிடித்த மணம்?

        சாப்பிடுறா ஐடமின்னா எல்லத்தோட மனமும் பிடிக்கும். அதுவும் ஓசியில வாங்கிக்க் கொடுத்த ரெம்ப பிடிக்கும்

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

   நான் அழைக்கிற பதிவரோட திறமைய நான் சொன்னா நல்லா இருக்காது . பேர சொல்லுறேன். நீங்களே தெரிஞ்சுக்கிடுவீங்க
       அமிதாப்பச்சன், அமீர்கான்

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

    ஏய்யா ராசா இது பிளாக்கனாத்தான் பதிஞ்சுக்கிட்டிருக்கன். யாருமே அனுப்பல்ல. அவனுங்க தெரிஞ்சவனுங்களுக்குத்தான் அனுப்புவானுங்க போல இருக்கு……….    

17. பிடித்த விளையாட்டு?

 வறுத்தெடுத்தல்

18. கண்ணாடி அணிபவரா?

     காலையில்ல மட்டும் தான் கண்ணாடி பாப்பேன். அத எப்படிப்பா அணிய முடியும்.

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

      ஆக்ஸன் படமின்ன உசிர வெட்டிடுவேன். லவ்வு படமின்ன உசிர எடுத்திடுவேன்     

20. கடைசியாகப் பார்த்த படம்?

 என்னோட படம் தான்

21. பிடித்த பருவ காலம் எது?

    எல்லா காலமும் பிடிக்கும்

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

உங்க கொஸ்டினுக்கு பதில் பண்ணிக்கிட்டிருக்கென்.அப்புறம் வடிவேலு ரேஞ்சுல என்ன புத்தகமின்ன என்ன சொல்லுறது.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

பெர்மணண்ட் (நம்ம படமில்லா அது )

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

 சுட்ட்தக்கு வறத்துட்டானேன்னு திட்டுற சத்தம் பிடிக்காது..நம்ம தகவல சுட்டதுக்கு பிளாக்கன் வறுத்திட்டானேன்னு பாராட்டுற சத்தம் பிடிக்கும்.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

உலகம் பூரா சுத்துறமில்லா (நம்ப பதிவு எழுதுறவனுங்க உலகம் பூரா இருக்காறானுங்க அவனுங்க பதிவுகளில எல்லாம் வலம் வருறமில்லாப்பா அதத்தான் சொன்னேன்.

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

      என்னத்த சொல்ல கொங்சம் போல மண்ட நிறைய சரக்க குடுத்துப்புட்டாரு கடவுள்.

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

மற்றவனுங்க பதிவ சுட்டு போடு திரட்டியில ஓட்டு வாங்குறவனுங்கள பார்த்த பிளாக்கன் வெறி பிடிச்சவனா மாறிடிவான்.இதுதத்தான் ஏற்றுக்கொள்ள முடியாது என்னால

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

      கோபம், அம்புட்டும் பதிவ  சுடுறவுங்கள பார்த்த அதிகமாயிடும்

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

தமிழிஷ், தமிழ்மனம், திரட்டி, தமிழ்10 இந்த தல(ள)ம் தான் ரெம்ப பிடிக்கும். இதுல தான இப்ப கொஞ்ச நாளா கலக்கிட்டிருக்கேன்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

     கடவுள் பிளாக்கனுக்கு மண்டையில மட்டுமில்ல உடம்பு பூரா மூளையக் குடுத்துப்புட்டான். அதனால அம்புட்டையும் பயன்படுத்தி மரமண்டையா அலையுற நாலு பயபுள்ளயயின்னாலும்  அறிவாளியாக்கனும் இது தாப்பா

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

என்ன சொய்ய அவள் இல்லையின்னா பஜாரில்ல ஃபிரியா சைட் அடிக்கலாம்.அது தான் செய்ய முடியும் (கூட இருந்தான கம்மினு குருடன் மாதிரி இருக்கனுமில்லா)

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

 வாழ்க்கையில நாம எல்லா விசயத்துலயும் கரெக்ட்டா சரியான பாதையில போனமின்ன.. அம்புட்டும் சரியாத்தேன் இருக்கும் அத விட்டுப்புட்டு , தவறான வழியில போன (சில நாளைக்கு வேணுமின்னா நல்லா இருக்கும்)முடிவும் தவறாத்தேன் இருக்கும்.


மறுவினைகள்

  1. முடியல….

  2. தமிழ் நல்லா வருது. நீங்க வக்கீல்னு நினைக்கிறேன்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: