பிளாக்கன் எழுதியவை | ஒக்ரோபர் 22, 2009

மாற்றங்கள் என்பது மாறாதது!

‘மாற்றங்கள் என்பது மாறாதது’ என்பதற்கு பிளாக்கன் மட்டும் விதிவிலக்கல்ல. அதனால் தான் என்னுடைய பிளாக்கின் ஹெட்டர் மாற்றப்பட்டதுடன் பதிவுகளை எழுதும் முறையும் மாற்றம் செய்யப்பட்டு விட்டது. அதேவேளையில் எனக்கு ஏற்பட்ட சில தவிர்க்க முடியாத காரணங்களால் சில மாதங்கள் உங்களுடைய பதிவுகளை படிக்கும் வாய்ப்பையும் இழந்து விட்டேன்.

அதேவேளையில், நானும் புதிய பதிவுகளை வெளியிடவுமில்லை. நீண்ட இடை(வேளை/வெளி)க்குப் பிறகு இந்தப் பதிவை வெளியிடுகிறேன். இனி தொடர்ந்து எழுத முடியும் என்றே நினைக்கிறேன்.

சில நண்பர்கள் பின்னூட்டம் அனுப்பி இருந்தார்கள். அவர்களுக்குக் கூட பதில் பின்னூட்டம் இட முடியவில்லை. இந்த இடைவெளியை எனக்கு ஏற்பட்ட விபத்தாகவே கருதுகிறேன்.

பிபத்துக்கள் ஏற்படுவதும், அந்த விளைவிலிருந்து மீண்டு வர சில காலங்கள் எடுத்துக் கொள்வதும் புதியது அல்ல.

பிளாக்கன்

பிளாக்கன் எழுதியவை | ஜூலை 18, 2009

ரீலைக் கண்டு ரியலில் காதலிக்கலாமா..!?

ண்பர் சிராஜ் அவர்கள் “பிளாக் உலகை சீர்திருத்த வந்த தீவிரவாதியே காதல் திரைப்படங்களினால் ஓடும் ஆண் பெண் இளைஞர்களுக்கு தங்கள் அறிவுரை என்ன? தங்களால் இவர்களை சீர்திருத்த முடியமா” என்ற கேள்வி கேட்டிருந்தார்.

நண்பர் சிராஜ் அவர்களே… உங்கள் வருகைக்கும், கேள்விக்கும் என் மனமார்ந்த நன்றிகளை உரிதாக்குகிறேன். என் அனுபவ ரீதியாக, கற்றுக்கொண்ட விடயங்களை அறிவுரையாக எழுத விரும்புகிறேன். அதேவேளையில், அவர்களை சீர்திருத்தும் கருத்துக்களை சொல்லத்தான் முடியுமே தவிர, திணிக்க முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைப்படங்கள் என்பது நடைமுறை வாழ்க்கையில் உள்ள சம்பவங்களாக இருந்தாலும், கற்பனைக் கதையாக இருந்தாலும், வரலாற்றுக் கதையாக இருந்தாலும், அதில் கற்பனையே அதிகமான இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது.   கலர்ஃபுல்லாக, கவர்ச்சியாக, வியாபார நோக்குடன் தன் படம் வெளியிடப்படுகிறது. அதேவேளையில் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் இருக்கும். சமுதாயத்தை சீர்திருத்துவதற்காக என்று சொன்னாலும், அதுவும் ஒரு வியாபாரம் தான். வியாபார நோக்கத்துடன் எல்லா வகையான விடயங்களையும் உள்ளடக்கிய ஒரு கோப்பு ஆகும்.

அதில் நல்ல, கெட்ட (பர்வைக்கு ஏற்றாற்போல மாறுபடும்) விடயங்கள் எல்லாம் கலந்த கலவையாகத்தான் இருக்கும். ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்றாற்போல பல நுணுக்கங்களை நடைமுறைப்படுத்தப் படுகிறது. சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சங்களில் ஒண்றாகத்தான் அமைந்துள்ளது என்றே நான் கருதுகிறேன். நடைமுறை வாழ்க்கைக்கு அதில் உள்ள நல்ல விடயங்களை மட்டும் எடுத்துக்கொள்ளலாம், அதுவே சாத்தியமானதாகவும் இருக்கும்.  தேவையில்லாதவற்றை அந்த 3 மணி நேரங்களிலேயே மறந்து விட வேண்டும்.

அதைவிடுத்து, சினிமாவிலேயே மூழ்கினால் நம்மையே சீரழித்து விடும் (அளவுக்கு அதிகமானால் பிரசாதமும் விஷம்தானே!).இன்றைய சூழலில் இருக்கும் இளம் பெண்கள் / வாலிபர்கள் அதில் வரும் தேடல் ,காதல், ஊடல் , ஓடல் போன்ற காட்சிகளைப் பார்த்து அதேபோல என் காதல் அமையாதா?,அதேபோல என் வாழ்க்கை அமையாதா?, அதே போல எனக்கு அழகான, அன்பான ஜோடி கிடைக்காத என்று ஏங்குவது உண்டு. படத்தில் உள்ள தங்களுக்குப் பிடித்த சம்பவங்களைத் தங்களுடைய வாழ்க்கையில் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஏக்கம் கொள்கிறர்கள். நடப்பது போல கற்பனை செய்கிறார்கள் (கற்பனையில் மூழ்குபவர்கள் எளிதாக காதல் வலையில் விழுந்து விடும் வாய்ப்புகள் அதிகமாக உண்டு).

“நாம் செய்ய ஆசைப்பட்டும், செய்ய முடியாத விடயங்களை கண் முன்னே வெள்ளைத்திரையில் ஒருவர் செய்யும் போது, நாமே செய்வது போல ஒருவித உணர்வுக்கு ஆளாகிறோம். அதாவது அநியாயம் நடக்கும் போது 10 பேரை நம்மால் அடிக்க முடியாது. ஆனால் படத்தின் நாயகன் அடிப்பார். இதை நாம் அடிப்பது போல எண்ணி பார்க்கிறோம். காதல் காட்சிகளில் கவிதைகள், பாடல்கள், என உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வரிகள் இருப்பதால், அதில் மூழ்கிவிடுகிறோம் (காதலில் தோற்றவர்கள் சினிமாவில் உள்ள சோகமான காதல் பாடல்களைக் கேட்டு, அந்த பாடல் போல் தங்களுடைய வாழ்க்கை அமைந்து விட்டது போல எண்ணுவது உண்டு)”

சினிமாவில் உள்ளாது போல காதல் செய்ய எண்ணி பலர் வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறார்கள். காதலிப்பது தவறான செயல் அல்ல. காதலால் இந்த உலகமே இயங்குகிறது.  அதேவேளையில் சினிமாவில் வருவது போன்ற காதல் அமைவது குறிஞ்சி மலர் பூப்பது போல அபூர்வம் என்று கருதுகிறேன்.

காதலர்களுக்கு சில ஆலோசனைகள்:

காதல் செய்வது தவறு கிடையாது. வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றோர்களை விட உங்களுக்கு உண்டு. ஜோடியைத் தேர்ந்தெடுக்கும் போது பல தடவை, பல கோணங்களில் அலசி, ஆராய்ந்து, தெளிவான முடிவு எடுக்கப்படவேண்டும். நம் வாழ்க்கையில் இறுதி வரை வரும் உறவு அல்லவா. அதை சரியாக தீர்மானிக்கா விட்டால், வாழ்க்கை நரகமாக அமைந்து விடுமல்லவா.

என்னைப் பொறுத்தவரை சில வருடங்களாவது நமக்கு / குடும்பத்துக்கு அறிமுகமான நபரை தேர்ந்த்தேடுத்தால் நல்லது. இதனால் ஓரளவு அவர்களைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அதை விட்டு ‘கண்டதும் காதல்’ என்பது எல்லாம் நடைமுறை வாழ்க்கைக்கு சரியாக இருக்காது. சினிமாவுக்கு மட்டும் தான் பொருந்தும் (சினிமாவில் அழகில்லாத நாயகி / நாயகன் நடித்த படங்கள் வந்திருக்கிறதா? இல்லை, அழகான நாயகி / நாயகன் மேக்கப் மூலம் அழகில்லாமல் காட்டப்படுவர்).

காதலும் வாழ்க்கைக்குத் மிக முக்கியமான் தேர்வு என்றே எண்ணுகிறேன். இத்தேர்வில் காதலிக்க முன்னமே சில வினாக்களுக்கு பதில் அளிக்கப்படவேண்டும். காதலிக்கும் காலங்களிலும் சில கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட வேண்டும். வாழ்க்கைத் தேர்வில் மதிப்பீடு செய்யும் உரிமை பெற்றோருக்குக்கூட குறைவாக இருப்பதாகவே கருதுகிறேன். அதனால் தான் இந்த தேர்வு, எழுதுபவர்களே மதிப்பீடும் (திருத்துதல்) செய்யயும் அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.  தவறாக மதிப்பீடு செய்தால், ஏற்படும் பாதிப்புக்களுக்கான தன்னையையும் அவர்களே ஏற்கவேண்டும். சரியான முறையில் மதிப்பீடு செய்து காதலித்தால், காதலும் வெற்றி பெறும். அதேவேளையில் வாழ்க்கையும் வெற்றிபெறும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

அதாவது காதலிக்க தேர்ந்தெடுக்கும் நபர்களைப் பற்றி அலசி ஆராயவேண்டும். அதாவது, தேர்ந்தெடுக்கும் நபர் நமக்கு ஏற்றவரா?  நமது குடும்பத்துக்கு ஏற்றவரா? நமது குடும்பத்தின் நிலை (தராதரம், இனம், மொழி) என்ன?அந்த நபரின் குடும்பத்தில் காதலை ஏற்றுக் கொள்வார்களா? அந்த நபரை தன்னுடைய குடும்பம் ஏற்றுக் கொள்ளுமா? போன்ற பல கேள்விகளைக் கேட்கவேண்டும்.

அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை விட, அன்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் (சினிமாவில் அழகுக்குத் தான் முக்கியத்துவம், ஹீரோவும் அழகனாக இருப்பார், ஹீரோயினும் அழகியாக இருப்பார். ஹீரோ, ஹீரோயினைத்தான் காதலிப்பார்).  காதல் செய்தால் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடலாம். இது பல காதலர்களை (சினிமாவில் கூட) பார்த்து தெரிந்துகொண்ட விடயம். பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். பல பிரச்சினைகள் வரலாம். நாம் சாரியான ஜோடியைத் தேர்ந்தெடுத்தால் பிரச்சனைகளுக்கான வாய்ப்புகள் குறைந்து விடும் என்றே கருதுகிறேன்.

ஓடிபோய் திருமணம் செய்யும் யோசனைக்கு இங்கே இடம் கிடையாது. ஒருமுறை நடக்கும் திருமண சந்திப்பு பலர் ஆசியுடன் நடந்தால் எப்படி இருக்கும். அதைவிடுத்து ஓடிப்போய் மணம் செய்து உறவுகளை இழந்து. வாழ்க்கையில் கஷ்டப்படு, துன்பங்களை அனுபவிப்பது எல்லாம் தேவைதானா?.

காதலிப்பவர்களே.. காதலிக்க தயாராகும் நண்பர்களே… இதை நான் யாரையும் வற்புறுத்தவோ.. திணிக்கவோ எழுதவில்லை. நண்பர் சிராஜ் அவர்களுக்காக என் இதயம் சொன்ன கருத்துக்களே..!

தற்போது, இந்தியாவில் விவாகரத்து வழக்குகள் அதிகமாக இளைய தலைமுறையுடையது. அதுவும் திருமணம் முடிந்து ஒருசில வருடங்களுக்குள் உள்ள ஜோடிகள்தான் விவாகரத்து வழக்குகளில் அதிகமாக உள்ளதாக செய்திகள் வெளிவருகிறது.  அதிலும் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் காதலித்து திருமணம் செய்தவர்கள் தான் அதிகம் என்று தெரிவிக்கின்றன. சிந்தித்து செயல்படுங்கள் நண்பர்களே..!

பிளாக்கன் எழுதியவை | ஜூலை 18, 2009

அனானிகள் என்ற மனநோயாளிகள்..!

நாளுக்கு நாள் அனானிகளின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கம்பியூட்டர் உலகை வைரஸ்கள் தாக்குவது போல பதிவுலகில் அனானிகள். இவர்களின் தாக்குதல் கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது என்று சொல்லலாம். இதுவரை அவர்களுக்கு பிடிக்காத பதிவர்களையும், பிடிக்காத பதிவுகளையும் தாக்குதல் நடத்தி வந்தார்கள்.

ஆனால், கடந்த சில நாட்களாக ஒருசில அனானிகள், பிரபல பதிவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.  அந்த பிரபல பதிவர்களால் அனானிகளுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை எனபது அனைவருக்கும் தெரிந்த விடயம். அப்படி இருக்கும்போது, பிரபல பதிவர்களை ஏன் அவர்களை தாக்கவேண்டும்?

இந்தவித தாக்குதலால், நல்ல எண்ணங்களை, தரமான கருத்துக்களை, உண்மையான செய்திகளை, வழ்க்கைக்கு தேவையான வாழ்வியல் முன்னேற்றங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த பதிவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள் என்று தெரிகிறது. அனானிகளின் செயலால் எல்லா பதிவர்களும் சில் பிரபல பதிவர்களின் நல்ல தரமான பதிவுகளை படிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடலாம்.

எந்தவிதமான எதிர்பார்ப்புக்களும் இல்லாமல், நல்ல பதிவுகளை கொடுக்கும் பதிவர்களை தாக்குவதால் இந்த அனானிகளுக்கு என்ன பயன்?
அனானிகள் யார்?
இவர்களின் லட்சியம் என்ன?

இவர்களுக்கு எந்தவிதமான லட்சியமோ / குறிக்கோளோ கிடையாது. இவர்களுக்கு நினைப்பது எல்லாம் மற்றவர்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும்.  இதனால், இவர்களுக்கு பயனும் கிடையாது.

யார் இந்த அனானிகள்?

யார் இந்த அனானிகள்? என்று ஆலசி ஆராயும்போது பலவகையான உண்மைகள் வெளிவருகிறது. இவர்கள் ஏதோ ஒருவிதத்தில் பாதிக்கப்பட்டவர்கள், திறமையில்லாதவர்கள், எதிர்த்து நின்று வாதம் செய்யும் தைரியம் இல்லாதவர்கள், பொறாமை கொள்பவர்கள், அவர்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டும் போது அதை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் இல்லாதவர்கள், மனிதனாக உடலளவில் இருந்தும் மனதளவில் 5 அறிவுள்ள விலங்குகள் என்ற தகவல்கள் வெளிவருகிறது. இதன் மூலம் இவர்களை ‘மனநோயளிகளின்’ என்று கூட சொல்லலாம்.

அனானிகளின்  லட்சியம் என்ன?

இந்த மனநோயாளிகளுக்கு லட்சியம் எல்லாம் கிடையாது. இவர்களால் முடியாத ஒரு விடயத்தை, வேறு யாரவது செய்யும் போது வெறுப்பு ஏற்படுகிறது. தங்களுடைய எரிச்சலை வெளிப்படுத்த அனானியாக மாறி பின்னூட்டம், மெயில் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். இதனால், இவர்களுக்கு அற்ப சந்தோஷம் கிடைக்கிறது. மற்றவருடைய வெறுப்பில் ஆனந்தப்பட்டு குளிர்காயும் ——————கள்.

அனானிகளை என்ன செய்யலாம்?,

1) அனானிகளிடம் இருந்து பின்னூட்டம் / மெயில் போன்றவைகள் வந்தால், அதை பொருட்படுத்த்க் கூடாது. பதிவர்கள் எந்தவித மன உளைச்சலுக்கும் ஆளாகவேண்டாம். தெரு ஓரத்தில் பைத்தியக்காரன் ஒருவன் இருந்தால் நாம் பரிதாபப் படுவோம். அதோபோல, இவர்களைப் பார்த்தும் பரிதாபப் படவேண்டும். ஏனென்றால், இவர்களும் அந்த பைத்தியக் காரன் போல மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்.

2) பதிவர்கள் பதில் பின்னூட்டம் இடவேண்டாம். திறமையில்லாத மனநோயளிகளாக உள்ள இந்த அனானிகளுக்கு நேரத்தை செலவு செய்யவேண்டாம். அவ்வாறு செய்யும் போது நமது தரமும் குறைந்து விடும் அல்லவா.

3) அனானிகள் இடும் பின்னூட்டங்களை அவர்களுடைய ஐ.பி முகவரியை வைத்து எளிதாக கண்டுபிடித்து விடலாம். அப்படி கண்டுபிடித்து விட்டால். அவர்க்ளை ஒண்றும் செய்யவேண்டாம். கீழ்ப்பாக்கம் அல்லது ஏர்வாடிக்கு ஒரு ரூபாய் செலவு செய்து போன் போட்டு தெரியப்படுத்தவும். மீதியை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

4) பதிவுர்களே உங்களுடைய நன்பர்கள் / தெரிந்தவர்கள் யாராவது அனானியாக இருப்பது தெரிந்தால், அவர்களுக்குத் தெரியாமல் மனநிலை மருத்துவரை அணுகி வைத்தியம் செய்ய ஏற்பாடு செய்யவும். பாவம், என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்கிறார்கள், பைத்திங்கள் அப்படித்தான் செய்யும் என்று நமக்குத் தெரியும் அல்லவா.

அனானிகளுக்கு :

நீங்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். பைத்தியங்களை தங்களை பைத்தியங்கள் என்று ஏற்றிக்கொள்ளாது என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் சொல்லவேண்டியது கடமை. நல்ல மனநிலை மருத்துவரை அணுகி உங்கள் நோயைக் குணப்படுத்தவும்.

பிளாக்கன் எழுதியவை | ஜூலை 17, 2009

Blogger Debut Award – புதிய பதிவர்களுக்கு மட்டும்..!

குதூகலத்தில் துள்ளிக் குதித்தேன். மட்டைப் பந்துப் போட்டியில் ஒரு மட்டை வீச்சாளர் 50 ஓட்டங்கள் பெற்றால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவாரோ, அதை விட பலமடங்கு மகிழ்ச்சி அடைந்தேன். திரைப்படம் ஒன்று திரையிடப்பட்டு வெற்றிகரமாக 50 நாட்கள் கடந்தால் அந்தப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர்கள் எவ்வளவு சந்தோஷம் அடைவார்களோ, அதைவிட பலமடங்கு சந்தோஷம் அடைந்தேன்.

காரணம், பிளாக்’கன்’ பதிவுலகில் கால் வைத்து இன்றுடன் 50 நாட்கள் முடிவடைந்துவிட்டது. 50 நாள் பயணமும் 50 வருட பயணம் போல் இருந்தது. அதாவது இந்த 50 நாள் பயணத்தில் பல வைகையான பதிவர்களைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொருவருடைய மனநிலை அறிய முடிந்தது, எழுத்தாற்றலை கவனிக்க முடிந்தது, பதிவர்களின் திறமையை நானும் பெற முடிந்தது. இப்படி 50 நாட்களும் பிளாக்கனுக்கு பல வகையான அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடிந்தது.

பயனாளராக உள்ளே வந்து பிளாக் படிப்பதை விட, ‘நானும் ஒரு பதிவர்’ என்று சொல்லிக்கொண்டு படிக்கும் போது கிடைக்கும் அனுபவம் வித்தியாசமான குதூகாலத்தை கொடுத்தது. இந்த 50 நாட்களை பிளாக்கனின் 50 வயது என்று கூட சொல்லலாம்.

ஒரு சில பதிவர்களைத் தவிர மற்ற பதிவர்கள் எல்லாருமே, எழுத்தாற்றலை ஊக்குவிக்க தவறவில்லை. பதிவுகளை இடும் போது அதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டி அதை திருத்திக்கொள்ள சிலர் உதவினர். இப்படியாக பிளாக்கன் 50 நாட்களைக் கடந்து விட்டான்.

பிளாக்கன் பதிவுலகில் கால் வைக்கும் போது, ஒரு கிராமத்து, தமிழ் எழுத்துமுறை தெரியாத, கிராமத்து ஸ்லாங்கில் பேசக்குடியவனாக, அதேவேளையில் தவறுகளை சுட்டிக்காட்டும் டெரராகத்தான் அறிமுகம் ஆனான்.

ஆனால், தற்போது அந்த ஸ்லாங்கை தவிர்த்து விட்டேன். “குற்றம் கண்டு பிடித்து பதிவர்களிடம் பெயர் எடுக்கலாம்” என்ற முடிவில் தான் பிளாக்கன் உருவானான். பெயரும் கிடைத்தது. ஆனால், பிளாக்கன் தன்னுடைய திறமையையும் நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால்,  அதைவிடுத்து சரியான தமிழில் எழுத ஆரம்பித்துவிட்டான்.

பிளாக்கன் பதிவுலகில் நுழையும் போது பல பதிவர்கள் ஆதரவு கொடுத்து ஊக்குவித்ததால் தான் டெரரோ.. டியரோ.. தொடர்ந்து எழுத முடிந்தது. உங்கள் ஆதரவு தான் எழுத வைத்தது.

ஆனால், பல பதிவர்கள் பிளாக் ஆரம்பித்து ஒருசில பதிவுகளுடன் நிறுத்திக் கொள்கிறார்க்ள். தொடர்ந்து எழுதுவதில்லை.

புதிதாக பிளாக் எழுத வரும் பதிவர்கள்/ இடையில் நிறுத்திக்கொள்ளும் பதிவர்களை தொடர்ந்து எழுதவைக்க வேண்டிய கடமை பிளாக்கனுக்கும் உண்டல்லவா.. இதனால் தான் பிளாக்கன் தன்னுடைய 50 நாள் பதிவை புதிய திட்டத்துடன் ஆரம்பிக்கிறான்.

awardjpgபுதிய பதிவர்களை ஊக்குவிக்கும் திட்டம்:

1) புதிய பதிவர்கள் எந்த துறையில் சந்தேகம் ஏற்பட்டாலும், எந்தநேரத்திலும் (24×7), பின்னூட்டம் அல்லது மெயில் மூலம் பிளாக்கனிடம் கேட்கலாம். அவர்களுடைய சந்தேகங்கள் பிளாக்கன் குழுவால் தீர்த்து வைக்கப்படும்.

2) புதிதாக வரும் பதிவர்களை ஊக்குவிக்க, அவர்கள் ஒரு மாதத்துக்குள் எழுதிய பதிவுகளின் தரத்தின் அடிப்படையில், “Blogger Debut Award” என்ற சிறப்பு விருது அளிக்கப்படும். இந்த அவார்டை அளிக்கும் உரிமை பதிவுலகில் 50 நாட்களுக்கு மேல் பதிவுலகில் வலம் வரும் பதிவர்கள் அனைவருக்குமே உண்டு.

இது புதிய பதிவர்களை ஊக்குவிக்கும் முயற்சி. ஏற்கனவே எழுதும் பதிவர்கள் தங்கள் ஆதரவைத் கொடுத்து பிளாக்கனின் பணிக்கு உதவலாம்.

பிளாக்கனின் கையால் Blogger Debut Award பெறும் முதல்  இரண்டு பதிவர்கள்…

1. ஒருவன்உன்னைப் போன்றவன்!

2. மனம் திறந்து

நேற்று (ஞாயிற்றுக் கிழமை) விடுமுறை என்பதால் நீண்ட நாட்களாக சந்திக்க முடியாமல் இருந்த சில நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடன் சில மணிநேரங்கள் கலந்துரையாடவும் நேர்ந்தது. யூத்கள் சிலர் (பிளாக்கனும் யூத்து தானப்பா… ஏத்துக்கேங்கப்பா…) சந்தித்தால் அரட்டை அடிப்பது தானே வழக்கம். ஆனால், அதற்கு மாறாக அந்த நேரத்தில் பிளாக் உலகம் பற்றிய பேச்சே அதிகமாக இடம் பிடித்தது. பிளாக் உலகம் என்றால் பிளாக்கனுக்கு அல்வா சாப்பிடுவது போல் அல்லவா..! (பிளாகன் யார்? எனப்து அவர்களுக்கு தெரியும்). அந்த நண்பர்களில் ஒருவர் நீண்ட காலமாக (பல ஆண்டுகளாக) பதிவுலகில் தமது பதிவுகளின் மூலம் திறமையை வெளிப்படுத்து கலக்கி வருபவர்.

பதிவுலகில் உள்ள அனுபவசாலிகளில் அவரும் ஒருவர் என்றே கருதுகிறேன். அவர் பேச்சுவாக்கில் சொன்னார் “பிளாக்கா.. சில ஆண் பிளாக் பதிவர்களும் / அனானிகளும் பிளாக் உலகில் உள்ள பெண் பதிவர்களை குறிவைத்து செயல்படுகிறார்கள். அவர்களுடைய நோக்கம், பெண் பதிவர்களை தங்களுடைய வலையில் சிக்க வைப்பதே ஆகும்” என்றார்.

பிளாக்கன் அதிர்ச்சிக்கு உள்ளானான்! அது எப்படி சாத்தியமாகும் என்ற எண்ணம் பிளாக்கன் மனதில் தோன்றியது. அப்படி இருக்க வாய்ப்பு இருக்காது என்று கருதி அவரிடமே கேட்டேன் “அது எப்படி முடியும்?, அப்படி பெண் பதிவர்களை வலையில் சிக்க வைக்க வாய்ப்பு இருக்கிறதா?” என்று அவரிடம் கேட்டபோது…

அவர் தமிழ் வழிகாட்டி கோனர் நோட்ஸ் போல விபரமாக விவரிக்க ஆரம்பித்தார்.  அதாவது, பிளாக் உலகில் இல்லாத சிலபேர் ஐ.டி மட்டும் (அனானி) உருவாக்கி வைத்து கொண்டு திரட்டிகளின் மூலம் பெண் பெயரில் உள்ள பதிவர்களின் பிளாக்குகளுக்கு சென்று, அந்த பதிவு நல்ல முறையில் இருந்தாலும் கூட, ஏதாவது ஒரு வரியை மட்டும் சுட்டிக்காட்டி எதிர் கருத்து போடுவார்கள். அதாவது “உங்களுடைய பதிவு அருமையாக உள்ளது . அதேவேளையில் என்னால் இந்த வரிகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த வரிகள் தவறானவை” என்று ஆரம்பிப்பார்களாம்.

சூழ்ச்சி பற்றி அறியாத பெண் பதிவர்களும் அவருடைய பின்னூட்டத்துக்கு மறுமொழி இடுவார்களாம். இவ்வாறாக தன்னுடய முயற்சியில் காய்களை நகர்த்துவார்களாம். அதேவேளையில் தான் ஒரு அறிவு ஜீவி  என்று நிரூபிப்பதையும் தவற விடமாட்டாராம்.  இந்த முறையில் அவரிடம் அறிமுகமாகி தன்னுடைய லீலையை நட்பு, தோழி, காதலி என்ற கோணங்களில் திசை திருப்பி, தன்னுடைய லீலையை எதிர் வரும் காலங்களில் ஆரம்பித்து விடுவார்கள். என்றார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஏற்கனவே பிளாக் எழுதிவரும் சில அனுபமிக்க நல்ல பதிவர்களும், தம்முடைய பொழுதுபோக்கிற்காக வேறு ஒரு அனானி ஐ.டி -யில் செயல்படுவதாகவும் சொன்னார். இந்த பதிவர்கள் பல வருடங்களாக பதிவுகள் எழுதுவதால் எளிதாக பெண் பதிவர்கள் பற்றி எல்லா விஷயங்களையும் தெரிந்துகொண்டு,  அதாவது, பல வருடங்களாக பதிவுகள் எழுதுவதால், பல பெண் பதிவர்க்ள் ஏற்கனவே அறிமுகமாகி இருப்பார்கள். அவருடைய பதிவுகளை தொடர்ந்து படித்து, பின்னூட்டம் இடும், அவருடைய வாசகராகவும் இருப்பார்கள்.

பின்னூட்டம் மூலம் அறிமுகமான பெண் பதிவர்களை, இவர்கள் அனானியாக மாறி தங்களுடைய வலையில் விழ வைக்க முயற்சி செய்கிறார்களாம்.

யாரோ ஒரு பதிவர் ( பெயர் சொல்ல விரும்பவில்லை ) பெண் பெயரில் உள்ள பிளாக் ஒன்றை பெண் என்று கருதி, பல மாதங்களாக முயற்சி செய்தாராம். அந்த பிளாக்-பதிவரும் அவருடன் கருத்துக்களை பரிமாறி, நட்பு என்ற நிலையில் சில வாரங்கள் சாட்டிங் கூட செய்தார்களாம். கற்பனை உலகில் மிதந்து கொண்டிருந்த அந்த பதிவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது, அதாவது யாரை பெண் பதிவர் அன்று எதிர்பார்த்து நேரத்தை சாட்டிங், பின்னூட்டம் என கழித்தாரோ, அந்த பதிவர் பெண் அல்ல ஆண்.  இப்போது நொந்து போய் பெண் பெயரில் உள்ள பிளாக்குகளை பார்த்தாலே அவருக்கு அலர்ஜியாம். இப்போது இரண்டு பேருமே நன்பர்களாக உள்ளார்களாம்.

இதன்மூலம் பெண் பதிவர்களுக்கு பிளாக்கன் தன்னுடைய கருத்தை முன் வைக்க விரும்புகிறான்.  வெளி உலகில் உள்ளது போல, பிளாக் உலகிலும் பல சிக்கல்கள் உள்ளது. அதனால், அறிவு பூர்வமாக பதிவுகளை எழுதும் நீங்கள் உங்கள் வாழ்க்கையிலும் அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்பட்டு, அனானிகளின் வலையில் சிக்காமல் உங்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள்.

தவறு செய்பவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றது போல அவர்களை மாற்றிக் கொள்வார்கள். அவர்களுக்கு தவறு செய்வதற்கு பலவகையான வழிகள் கிடைக்கும். எதைப்பற்றியும் கவலை கிடையாது. ஆனால், நல்லவர்களாக் இருப்பவர்களுக்கு ஒரே வழிதான். இதனால் தான் நல்லவர்கள் எளிதாக தவறான வலைகளில் சிக்கி தவிக்கிறார்கள்.

குறிப்பு : இந்த பதிவு ஆண் பதிவர்களை (பிளாக்கனும் ஆண் தான்) குற்றம் சொல்வதற்காகவோ அல்லது பிளாக் உலகை தவறு என்று சொல்வதற்க்காகவோ அல்ல . நடைமுறையில் உள்ள சில சிக்கல்களை எடுத்துச் சொல்வதற்காக மட்டுமே.   2% குறைவானவர்களே இதுபோன்ற தவறான முறைகளில் செயல்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் குறைவான பெண் பதிவர்களே பதிவுலகில் உள்ளார்கள். அவர்களை எச்சரிக்கையாக இருந்து, நல்ல பதிவுகளை எழுதுவதை ஊக்குவிப்பதற்காக மட்டுமே..!

இது பிளாக்கனின் கடமை, ஏனென்றால் பல பெண் பதிவர்களின் பதிவுகளில் இருந்தும், பல விஷயங்களை பிளாக்கன் படித்து தெரிந்து கொண்டவன் என்பதால் தான். கருத்துக்களுக்கு மறுமொழி இடுவதை தவிர்த்து விடாதீங்க. நல்ல நண்பர்கள் பலர் கிடைக்கும் போது சில கெட்டவர்கலும் அறிமுகம் ஆவார்கள். கெட்டவர்களுக்கு பயந்து உங்களுடைய வெற்றிப் பயணத்தை நிறுத்தி விடாதீர்கள். பயணத்தில் சில தடைக் கற்கள் வரத்தான் செய்யும். நாம் தான் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை : பிளாக்கனும் யூத்து தாம்மா… சில நேரத்தில அவனே அனானியா மாறி வந்து முயற்சி பன்னுவான். ஏமாந்துடாதிங்க.. எச்சரிக்கையா இருங்க..

ன்னுடைய முதல் நகைச்சுவை ‘முயற்சி’க் கட்டுரையை வெளியிட்டதுக்கு யூத்ஃபுல் விகடனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு, இந்திய ராணுவத்தில் கெளரவ கர்னல் பதவி வழங்கப்பட்ட செய்தியை கேள்விப்பட்ட போது, மகிழ்ச்சியடைந்தேன். மகிழ்ச்சிக்கான காரணம் அவருடைய பல படங்களைப் பார்த்து நானும் ரசித்திருக்கிறேன்.

இந்த இடத்தில் நமது கேப்டன் விஜயகாந்த்தை களமிறக்கி, நகைச்சுவையாக கட்டுரை எழுதி முடித்து, யூத்ஃபுல் விகடனுக்கு அனுப்பினேன். அதை உடனே தேர்வு செய்து சூடு தணிவதற்குள் ‘விட்’ பகுதியில் வெளியிடப்பட்டதைக் கண்டு மனம் மகிழ்ந்தேன்.

என்னைப் போன்ற யூத்துகளின் (நம்புங்கப்பா!!) படைப்பாற்றலை ஊக்குவிக்கும் யூத்ஃபுல் விகடனுக்கும், என் பதிவுகளை ஏற்றுக் கொள்ளும் திரட்டிகளுக்கும், இதற்கும் மேலாக தொடர்ந்து எனது பதிவுகளைப் படித்து பயன் பெறும் சக பதிவர்கள் (பொய்யி பொய்யி பொய்யி..) ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி.

அந்த நகைச்சுவைக் கட்டுரைக்கான லிங்க் இதோ…  “கேப்டனை விட மோகன்லால் சாதித்தது என்ன?!! – ஒரு கொந்தளிப்பு் கடிதம்!”

இந்த நேரத்தில் ஓர் ஏமாற்றத்தையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். நான் மிகவும் சிரத்தையுடன், முதல் முதலாக தரமான பதிவு என்று கருதி எழுதிய ஒரு பதிவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் இல்லை.

அந்தப் பதிவு… பசங்க – விமர்சனம் அல்ல; பிளாக்கனின் பார்வை மட்டுமே!

மீண்டும் நன்றி. நன்றி. நன்றி………………..

நேரம் கிடைக்கும் போது பிளாக்கர்களின் பதிவுகளைப் படிப்பது பிளாக்கனின் உருப்படியான பொழுதுபோக்கு. நேற்று வலைப்பதிவு திரட்டிகளில் சுற்றி திரிந்து பல பதிவுகளைப் படித்தேன். சில பதிவுகள் பிளாக்கனின் இதயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. நல்ல கருத்துக்களை, நல்ல விஷயங்களை அவர்களுடைய எண்ணங்களுடன் கலந்து சுவையாக கொடுத்து, படிப்பவர்களை உணர்ச்சிவசப்பட வைக்கக்கூடிய விதத்தில் இருந்தன.

அந்த நல்ல பதிவுகளின் சில வரிகள் பிளாக்கனின் உணர்வுகளுடன் உறவாடிக்கொண்டிருந்த அந்தவேளையில் ஒருவித நெகிழ்வுடன் திரட்டிகளில் மற்றைய பதிவர்களின் பதிவுகளைத் தேடி அலைந்தபோது, பிளாக்கன் ஒருசில பதவர்களின் பிளாக்குகளுக்கு செல்ல நேர்ந்தது.

அந்த பதிவுகள் பிளாக்கனுக்கு அதிர்ச்சி கலந்த கோபத்தை உருவாக்கியது. அந்தப் பதிவர்கள் அப்படி என்ன எழுதினார்கள்? பாலியல் சம்மந்தமாக எழுதப்பட்டிருந்தது. பாலியல் சம்மந்தமாக எழுதுவது தவறா?

பாலியல் சம்மந்தமாக எழுதுவது தவறு கிடையாது. அதில் அனுபவம் வாய்ந்த வல்லுனர்கள், ஆழ்ந்த வாசிப்பும் அனுபவமும் உள்ளவர்கள் எழுதலாம். கண்டிப்பாக சமூகத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த அது தேவை. அப்படி இருக்கும் போது பிளாக்கனுக்கு ஏன் கோபம் வர வேண்டும்?

கோபத்திற்கான காரணம் என்னவென்றால் அந்தப் பதிவுகளில் கதைகள் எழுதுவது போல எழுதி, செக்ஸ் நேரிடையாக நடப்பதுபோல வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பதிவுகள் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் இருந்தது. அதிலும் திரட்டிகளில் நடைமுறையில் உள்ள கதை போல தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. லீடிலும் எந்தவிதமான தவறான கருத்துக்களையும் பயன்படுத்தப்படவில்லை.

எவ்வளவோ நல்ல விஷயங்களின் பதிவுகளை எழுதி திரட்டிகளில் கொடுக்க இருக்கும்போது,  இதுபோன்ற பதிவுகள் நல்ல சில பதிவர்களின் மனநிலையையும் கெடுக்கும் விதமாக இருப்பது வேதனைக்குரியதாக உள்ளது. பாலியல் சந்தேகங்கள், நிபுணர்களின் கருத்து, கேள்வி-பதில் இது கண்டிப்பாக அவசியமான ஒன்று. அதை தவிர்த்து வேறுவிதமானவை தேவையில்லாதவையாகவே நான் கருதுகிறேன்.

அதேநேரத்தில் செக்ஸ் கதைகள் எழுதுபவர்கள் எழுதலாம், ஆனால், திரட்டியில் போட்டு பதிவர்களின் மனநிலையை மாற்ற வேண்டாம் எனபதை முன் வைக்கவே இந்த பதிவை இடுகிறேன். திரட்டிகள் என்பது பதிவார்கள் எல்லோரையும் ஒன்று சேர்க்கும் ஒரு பாலமாக செயல்படுகிறது. இலவசமாக திரட்டிப் பணிகளை செய்பவர்களுக்கு நாம் நன்றியை சொல்லவேண்டிய நிலையில் உள்ளோம்.

அதேநேரத்தில் தவறான முறையில் பயன்படுத்தும் ஒருசில பதிவர்களால் திரட்டி உருமையாளார்களர்கள் உட்பட பதிவர்கள் அனைவருமே பாதிப்பை சந்திக்க நேரிடும் நிலை ஏற்படலாம். அதனால் தான் என் மன எரிச்சலை இங்கே பதிவாக இடுகிறேன்.

பிளாக்கன் அவனுடைய ஸ்லாங்கில் ஆரம்பிக்கலாம் என்று எண்ணித்தான் தொடங்கினான். ஆனால், வேண்டாம் நல்ல முறையில் சொல்ல வேண்டும் என்பதற்காக ஸ்லாங்கை மாற்றி எழுதுகிறான்.

இந்தப் பதிவில் தனிப்பட்ட முறையில் எந்த பதிவர்களையும் குறிப்பிடவில்லை.  அப்படி குறிப்பிட்டு யாருடைய மனசையும் புண்படுத்த விரும்பவில்லை. இன்னொரு காரணமும் உண்டு, தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டால், அந்த நபர் அடுத்த நிமிஷமே அனானியாக மாறிவிடுகிறார். அதன்பின் அனானி தொல்லை பிளாக்கனுக்கு கொசுத்தொல்லை மாதிரி மாறிவிடுகிறது.

கொசுத்தொல்லையை நிறுத்த பிளாக்கனும் களத்தில் இறங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அதன்பின் பிளாக்கனும் அந்த நபருக்கும் இடையில் டெர.ர்………ர்…….ர் ஆரம்பமாகிவிடும்.

சரி மேட்டருக்கு வருவோம், டீட்டெய்லா சொல்லிப்பூட்டேன். அய்யா பதிவர்களே…….. கொஞ்சம் யோசிச்சு நல்ல விதமா எழுதுங்க… அத விட்டுப்பூட்டு இல்லய்யா நான் அப்பிடித்தேன் பாலியல தூண்டுற கதையத்தான் எழுதுவேன். அத வச்சுத்தேன் என்னோட பிளக்க ரன் பண்ணமுடியுமுன்னு லா………..லா………….  பேசினா அம்புட்டுத்தான் பிளாக்கன் டெரர….ரா களத்துல இறங்கிடுவான். டெர…ரா இறங்கிட்டா எதுக்கும் கவலப்படமாட்டான்..

தனிப்பட்ட முறையிலையும் தாக்குவான், மொத்தமாயும் தாளிப்பான்.  ஏப்பா இதோட அந்த கதைகள நிறுத்திப்புடிங்கப்பா…………..

(குறிப்பு : வலைப்பதிவுகளை தவறாக பயன்படுத்தும் 10%-க்கும் குறைவானவர்களைப் பற்றியதேயன்றி, ஒட்டுமொத்த வலையுலகும் இங்கு முன்வைக்கப்படவில்லை)

மிழில் சிறுவர் இலக்கியத்தில் உள்ள வறட்சிக்கு ஈடாக, தமிழ் சினிமாவிலும் சிறுவர் திரைப்படங்களின் எண்ணிக்கை விரல்  விட்டு எண்ண வேண்டிய அவசியம் கூட இல்லாத அளவுக்கு மிகக் குறைவாக இருப்பது, நம் சிறார் சமூகத்துக்கு மட்டுமின்றி,  நமக்கு நாமே செய்து கொள்ளும் துரோகம்!

Pasanga__1_குழந்தைகள் உலகம் பெரிது. பெரிது என்றால் அளவிடவே முடியாத அளவு விஸ்தீரணம் கொண்டது. ஆனால், அந்தக்  குழந்தைகள் உலகத்தை இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், கம்ப்யூட்டர் விளையாட்டுகளும் மிகுதியாக அபகரித்துக்  கொண்டிருக்கிறது.

ஐன்ஸ்டீனிடம் இருந்த குழந்தை மனோபாவம் தான் இயக்கவியல் கோட்பாடு உருவாகக் காரணமானது, அவரைப் போல்  சிறுவர்களின் ஆர்வம் நிறைந்த எண்ணங்களைக் கொண்ட கலிலியோ, டெலஸ்கோப் மூலம் கோள்களைக் கண்டார். இதுபோல பல உதாரணங்களைச் சொல்லலாம். மொத்தத்தில் சிறார்களே உலகின் ஒளி என்று கூறினாலும் அது மிகையானது அல்ல.

இந்த மகத்துவத்தை அறிந்து கொண்டதால்தான் என்னவோ, குழந்தை இலக்கியத்துக்கு நம் முன்னோர்கள் அதிக முக்கியத்துவம்  தந்தனர். தாலாட்டில் தொடங்கி குழந்தைகளுக்கு ஊட்டப்படும் கதைகளும் பாட்டுகளும் உலகின் வேறெந்த நாட்டை விடவும் நம்  பண்பாட்டில் அதிகம். எழுதப்படாத வாய்மொழி மரபில் பிள்ளைகளுக்காக நம் முன்னோர்கள் உருவாக்கியது ஏராளம். ஆனால்,  அந்த வழியைப் பின்பற்றி, சிறுவர் இலக்கியம் படைக்க நம்மவர்கள் இப்போது தயங்குவது கூட ஒரு வகையில் அறியாமைதான்.

விரல்விட்டு எண்ணக்கூடிய சில குழந்தை எழுத்தாளர்கள் இருந்தால் கூட, அவர்கள் குழந்தைகளுக்கு தங்கள் படைப்புகளின் வாயிலாக அறிவுரைகள் மட்டுமே வழங்கி வருவது வருத்தத்துக்குரியது!

இருபத்து நான்கு மொழிகளில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட ராமானுஜத்தின் ‘ஃபோக் டேல்ஸ் ஆஃப் இந்தியா’, வெர்ரியர்  எல்வினின் ‘வென் தி வோர்ல்ட் வாஸ் யங்’ போன்ற புத்தகங்கள் இன்றைக்குக் கூட சிறப்பாக போற்றப்படுவதற்குக் காரணம்,  அந்தக் கதைகளில் குழந்தை இலக்கியத்துக்குரிய ஜீவன் மிகுந்திருப்பதே!

என்ன இது? ‘பசங்க’ பற்றி கூறுவதாகச் சொல்லிவிட்டு சிறுவர் இலக்கியம் பற்றி விவரிக்கிறேன் என்று கேட்பது என் செவிகளில்  விழுகிறது… காரணமில்லாமல் சொல்லவில்லை…

குழந்தைகளுக்காக எழுதுவதை அற்பவேலை அல்லது முடியாது என்று இன்றைய படைப்பாளிகள் பலர் கருதுவதாகவே  எண்ணுகிறேன். அதைப் போலவே சிறுவர் சினிமாவை எடுக்க நம் சினிமா படைப்பாளிகள் முனைவதில்லையே என்ற  கோபத்தை வெளிப்படுத்தவே மேலேயுள்ள விவரிப்புகள்!

சினிமா படைப்பாளிகளின் மேலோட்டமான கண்ணோட்டத்தைத் தகர்த்தெரிந்துவிட்டு, வீரு நடை போட்டு, நம் மனத்திலே  ஆழமாக குந்திக் கொண்டுள்ளது, ‘பசங்க’ என்ற தமிழ் சினிமா!

நாம் எல்லோருமே கடந்து வந்த சூழல் தான் என்றாலும், தமிழ் சினிமாவைப் பொருத்தமட்டில் கதையும் கதைக்களமும் புதிது  என்றுச் சொல்வதே தகும்.

வாழ்க்கையில் எவ்வளவோ நிகழ்வுகளை கடந்து வந்திருந்தாலும், அவற்றைக் கவனித்து வந்தாலும், அதை நம் மனத்திலே  பதிவு செய்வது இல்லை. அத்தகைய சம்பவங்களின் கோர்வையை இயக்குனர் பதிவு செய்திருப்பதும், அதைக் காணும் போது  நம்மை அதனுள் உள்ள கதாப்பாத்திரத்துடன் பொருத்திப் பார்ப்பதும்தான் தான் ‘பசங்க’ளுடன் ஜீவனுடன் பயணிக்க வைக்கிறது.

ஒரு வகுப்பில் இரு மாணவர்கள். அவர்களுக்குள் இயல்பான வெவ்வேறு குணாதிசயங்கள். அவ்விருவரும் எதிரெதிர் வீட்டில்  வசிப்பவர்கள். அவர்களது குடும்பத்துக்குள்ளும் சில உரசல்கள்… இப்படி இயல்பு மீறாத சூழலைக் கதையாக்கி, நம் மண்ணின்  குழந்தைகளின் உலகத்தை திரைக்கதையாக்கி செதுக்கப்பட்டிருக்கிறது, ‘பசங்க’ எனும் மகத்தான சினிமா படைப்பு.

குழந்தைகளின் உலகத்துக்கும் பொருளாதார நிலைப்பாட்டுக்கும் மிகப் பெரிய அளவில் தொடர்பில்லாததன் காரணமாகவே,  அவர்களின் உலகில் மகிழ்ச்சி மட்டுமே வியாபித்திருக்கிறது. அவர்களின் உலகை அப்படியே காட்டியதால், அம்மகிழ்ச்சி  நம்மையும் தொற்றிக் கொள்கிறது. இது, படம் முழுவதுமே பிழறாமல் தொடர்வது ‘பசங்க’ படைப்பாளிகளின் தனித்திறமை!

குழந்தைகளுக்கான படைப்புகள் என்பது அவர்களுக்கானது மட்டுமல்ல; அவ்வகையான படைப்புகள் பெரியவர்களுக்கானதும் கூட.  அந்த இலக்கணத்தை மிகச் சிறப்பாக கடைப்பிடித்திருக்கிறார், இயக்குனர் பாண்டிராஜ்.

குறிப்பாக, ஒரு பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும் என்பது ஆங்காங்கே காட்சிகளினுடே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால்,  அவையெல்லாம் அறிவுரை தொனியில் இல்லாதிருப்பதே படைப்பின் சிறப்பு. அந்தக் காட்சிகளைக் காணும் பெற்றோர்கள்  தங்களையும் அறியாமல் தாங்கள் அறியா தவறுகளைத் திருத்திக் கொள்ளும் சாத்தியம் நிறையவே உண்டு.

படத்தில் என்னைக் கவர்ந்த அம்சங்களில் இரண்டு முக்கியமானவை. ஒன்று ஒளிப்பதிவு. குழந்தைகளின் உலகத்துக்குள் புகுந்து  பயணிக்க துணைபுரிந்திருக்கிறது அற்புதமான ஒளிப்பதிவு.

இசை… குறிப்பாக பின்னணி இசை… இசையில் நகைச்சுவைத் தன்மையை வெளிப்படுத்த முடியும் என்று இந்தப் படத்தில்  இருந்து புரிந்து கொண்டேன். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், சிறார்களிடையே நடக்கும் செல்ல மோதல் காட்சிகளின்  போது பயன்படுத்தப்பட டிபிகல் ஸ்டன்ட்டுக்கான பின்னணி இசை!

சினிமா என்பது ஒரு குழு மனப்பான்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் கலை வடிவம் என்பதையும், ஒரு தரப்பு பிசகினால் கூட  எதிர்மறை விளைவுகளுக்கு ஆளாக நேரிடும் என்பதையும் மிகத் துல்லியமாக சொல்லும் இப்படம், குழு முயற்சிக்குக் கிடைத்த  முழு வெற்றி என்றே சொல்வேன்.

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி தொடங்கும் போது ஏற்படும் ஒரு சம்பவம் சினிமாத்தனம் கொண்டது என்று என் நண்பர் ஒருவர்  சொன்னான். நான் திருப்பிக் கேட்டேன், “சினிமாத்தனம் இல்லாத ஒரு பொருளை எப்படி சினிமா என்று அழைப்பது?” என்று.

பசங்க… பசங்க, பெரியவங்களுக்கான படம் மட்டும் அல்ல… அர்ப்பணிப்புடனும் நம்பிக்கையுடனும் அணுக மறுக்கும்  கதைக்களத்தை நாடத் தூண்டும் சக சினிமா படைப்பாளிகளுக்கான படமும் கூட!

(குறிப்பு : ஜெட்லியின் மனம் வருந்தும் படி நடந்து கொண்டதற்கு இந்த பிளாக்கன் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறான்.  பிளாக்கன் என்ற வலைப்பதிவு… ஏதோ ஒரு புது முயற்சியாகவே கருதினேன். வேண்டுமென்றே எழுத்துப் பிழையுடன் எழுதி, சக  பதிவர்கள் அனைவரையும் கலாய்ப்பதற்கானதாகவும், அதேநேரத்தில் சுடுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுவோரை ஜாலியாக  சாடுவதற்கானதாகவும் பயன்படுத்தினேன். ஓரளவு வரவேற்பு இருப்பதை மறுப்பதற்கில்லை. சினிமா விமர்சனம் என்று  போடாமல் ‘பார்வை’, ‘எண்ணம்’ என்கிற ரீதியில் போடுங்கள் என்று கொஞ்சம் கூடுதல் டெரராக நடந்து கொண்டேன். என்னிடம்  சொந்தச் சரக்கில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. என்னிடம் சரக்கு இருக்கிறது என்று நானே நம்புகிறேன் என்பதைச்  சொல்லவே, அண்மையில் எனக்கு மகிழ்வூட்டிய பசங்க படத்தைப் பற்றி இங்கே பதிவிட்டுள்ளேன். இந்த வீம்பு, ஒரு வகையில்  குழந்தைத் தனமாக இருந்தாலும் அப்படி இருப்பதும் மகிழ்ச்சியே. இந்தப் பதிவைத் தவிர்த்து இனி வரும் பதிவுகள் அனைத்துமே  வழக்கமான பிளாக்கன் பாணியில் தான் இருக்கும் என்பதையும் உறுதி கூறுகிறேன்)

கபதிவர்களே வணக்கமுங்க………

இன்னைக்கு ஒரு முக்கியான பதிவரப் பத்தி எழுதப்போறான் இந்த பிளாக்கன்.  பிளாக்கன் போடுற பதிவு சில தமிழிஷ் திரட்டியில ஹிட்டாகுது.

அதாவதுங்க ஒரு பதிவு தமிழிஷில ஹிட்டாகுதின்னா…. கண்டிப்பா அந்த பதிவுல எழுதிய விஷயம், பதிவர்களுக்கு பிடிச்சிருக்குது.  அவங்க அதை ஏத்துக்குகிடுறாங்க அப்பிடித்தானங்க அர்த்தம்……….

சனிக்கிழமை மாலையில பிளாக்கன் ஒரு பதிவு போட்டான். அதோட தலைப்பு “சினிமா விமர்சனம் போடுற பதிவர்களுக்கு ஒரு டெரரு பதிவு!!!” இதுதாங்க.

இந்த தலைப்பில பிளாக்கன் யாரையுமே தனிப்பட்ட முறையில திட்டியோ, பாராட்டியோ எழுதவில்லை. சில பேரு சினிமா படத்தைப் பார்த்துட்டு.. அவங்க இஷ்ட்டத்துக்கு சினிமா விமர்சனம் என்னு போட்டு எழுதுறாங்க.. சினிமா விமர்சனம் -ன்னு போட்டு எழுதனும்மின்னா கண்டிப்பாக அதை எழுதுவதுக்குன்னு நிறைய விதிமுறைகள் இருக்குதய்யா……. விதிமுறைகளைத் தெரியாதவங்க (மொக்கையா எழுதறவங்க) சினிமா விமர்சனமின்னு பதிவுக்கு போடவேண்டாம். வேறு ஏதாவது (என் எண்ணம், கருத்து, சினிமா பார்வை… இப்படி எது வேணுமின்னாலும்) போட்டுக்கோங்க அப்படின்னு சொன்னேன்.

சில அரைகுறை வேக்காடுகள் சினிமா விமர்சனமின்னு பண்ணுற லொள்ளு,  அவர்களுக்கு தெரியாமலே ஏதோ ஒரு விதத்தில பாதிப்பை ஏற்படுத்து.  இவங்க படம் ரீலிசாகி ஒரு மாதம் கழிச்சு போட்டாலும் பரவாயில்லைங்க… படம் ரீலிஸான அன்னைக்கே ஓசியில டிக்கெட்ட வாங்கி பார்த்துப்பூட்டு அன்னைக்கே எழுதுறாங்க….

நான் போட்ட அந்த பதிவு தமிழிஷ் திரட்டில ஹிட்டாகி, 29 ஓட்டும் வாங்கிக்கிட்டிருக்குது, ஆனால், ஜெட்ட்ட்ட்ல்லி..(http://www.nee-kelen.blogspot.com/) னு ஒரு பதிவரு மட்டும், நாம் அப்பிடித்தான் எழுதுவேன் அதைக்கேக்குறதுக்கு நீயு யாருய்யா அப்படி இப்படீன்னு பின்னூட்டம் போட்டாரு.. பிளாக்கனும் டீசண்டா அவருக்கு புரியுற விதத்தில பதில் போட்டான்.

அவரு நான் புடிச்ச ஸ்வைன் ஃபுளுக்க்கு இரண்டே முக்காக்காலுய்யா.. நான் அப்படித்தேன் எழுதுவேன்னு ஓவரா பின்னூட்டம் பண்ணுறாருப்பா……

சரி, மனுசன் இப்படி எழுதுறாரேன்னு அவரோட பிளாக்கில போய் பார்த்தா.. அம்புட்டும் சினிமா விமர்சனம் எங்கிற பேரில கிறுக்கி வச்சிருக்காரு..

சினிமா விமர்சனத்தை வச்சே பிளாக்கை நடத்திக்கிட்டு இருக்கிறதினாலா, அவருக்கு ரொம்ப கடுப்பய்யா….. பிளாக்கன் நம்மள தாளிச்சிட்டானே…. இனி நம்ப பிளாக்க படிக்கிறத்துக்கு அதிக அளவில பதிவர்கள் ( ஏற்கனவே நாலு பேரு மட்டும் தேன் படிக்கிறானுங்க) வரமாட்டாங்க..

நாம பிளாக்கில எழுதனுமின்னா… பிளாக்கன ஒரு வழிபண்ணனும் அப்படின்னு ஜெட்ட்டிலி.. பின்னுட்டத்தப் போடுறாப்போல..

பிளாக்கன் இவனுங்கள மாதிரி ஆயிரம் பேர பார்த்தவன். பழம் தின்னு கொட்ட போட்டவன். விட்டுடுவானா..  அதுதேன் ஆரம்பிச்சுட்டான்…

ஏய்யா  ஜெட்ட்ட்ட்ட்ல்ல்லி……. நீயி கிறுக்குறத்துக்கு சினிமா விமர்சனம் தான் கிடைச்சுதா?… சினிமா விமர்சனமின்னு என்னான்னு  தெரியமாய்யா.

ஓசியில டிக்கெட்டு வாங்கி படத்தப்பாத்துட்டா நீயெல்லாம் அறிவு ஜீவியாய்யா…….. கொஞ்சமின்னாலும் எழுதுறத்துக்கு முன்னாடி யோசிக்கணூமிய்யா.

நாம எழுதுறதுனால யாருக்குமே பாதிப்பு வரக்கூடாது. உனக்கு ஓசிக்கக்கூடிய மனுசத்தன்மையில்லை. சொன்னாலும் புரிஞ்சுக்கிடுற சக்தியும் கிடையாது.

ஒன்னு நீயா யோசிச்சு எழுதுப்பா.. இல்லேன்னா மத்தவங்க சொல்லுறத கேளு…

உன்னப் பத்தி எழுதுறதுக்கு யோசிச்சேன்.. ஏன்னா கல்ல தூக்கி ஸ்வைன் ஃபுளூ மிருகம் மேல எறிஞ்சா பாதிப்பு நமக்கும் தானின்னு. ஆனா, பராவாயில்ல நாலு பேர காப்பாத்தணுமின்ன என்னவேனுமின்னாலும் செய்யலாமின்னு தான் களத்தில குதிச்சேன்.

ஏய்யா, பிளாக்கன் பதிவ பார்த்ததும் ஏய்யா உனக்கு கோபம் வருது… நீ தப்புப் பண்ணுற அதுதான் வயிறு எரியுது.  பொத்திக்கினு போய்யா…

சினிமா நடிகர் ஜெட்டிலி பேர வச்சிக்கிட்டு,  ஊசிப்போன இட்டி—–லி மாதிரி ஓவரா ஸ்மல் வருற மாதிரியில்லா இருக்குது உன்னோட   எழுத்து… தாங்க முடியல்லய்யா கப்ஸ்து.. கொஞ்சம் கொறைச்சுக்கய்யா

பிளாக்கன் அறிவிப்பு : இந்த சினிமா விமர்சன பதிவு ஜெட்லி மாதிரி முட்டாள் சினிமா பதிவு பண்ணுறவங்களுக்கு மெட்டுமே.. நல்ல விதமா எழுதினா பிளாக்கனே பாராட்டுவான். இவன மாதிரி ஓவரா ஸ்ம்ம்ம்ம்ம்ல் வீசினா அம்புட்டுத்தானய்யா… பிளாக்கோட GUNய்யா நானூ.

பிளாக்கன் யின்னா காணாம போயிட்டானான்னு, பல பேரு நினைக்கிறாங்க..  என்ன பண்ணுறது கொஞ்சம் பிசி ஆகிட்டான் அம்புட்டுத்தேன்.

சரிங்க, மேட்டருக்கு வருவோம். பதிவர்கள் பலபேரு விமர்சனம் எழுதுறாங்க. படத்தப் பாக்குறாங்க – எழுதுறாங்க… அத ஏத்துக்கிலாம். ஆனா அவுங்க பண்ணுற காமிடிக்கு ‘சினிமா விமர்சனம்’ ன்னு வேற போடுறாங்க…

ஏய்யா சினிமா விமர்சனமின்னா என்னென்னு தெரியுமாய்யா?

முதல்ல விமர்சனம் எழுதுறதுக்கான விதிமுறைகளை முழுசா படிங்கய்யா..!

ஒரு விமர்சனத்தோட அடிப்படை விஷயமே… முதல்ல அந்தப் படத்துக்கு தணிக்கைக்குழு தந்த சர்டிபிகேட்டு என்னன்னு மென்ஷன் பண்ணனும். யு-வா, யு/ஏ-வா, ஏ-வான்னு.. இத போட்டுப்புட்டுதான் மத்த விஷயத்தை தொடங்குணும். இதுவரைக்கும் யாராவது போட்டிருக்கீங்களா?

சினிமா விமர்சனம் எழுதுவது எப்படி என்பது பற்றிய பல நல்ல புத்தகம் கிடைக்குதுய்யா. அதையெல்லாம் தேடிபுடிச்சு வாங்கிட்டு தெரிஞ்சுகிட்டு, சினிமா உலகத்தை ஆழமா பார்க்க ஆரம்பிச்சுட்டு அப்புறம் சினிமா விமர்சனம் எழுதுங்கய்யா!

பதிவர்கள் எழுதறதெல்லாம் விமர்சனம் கிடையாதுய்யா.. அதுக்கு பதிலா வேற பேர பயன்படுத்துய்யா…  அதுவும், படத்தப் பார்த்துப்பூட்டு ( ரசிச்சு பார்க்கணுமய்யா). நாலு விதத்திலயும் அலசி ஆராய்ஞ்சு. உன்னோட மூளையில என்ன தோணுதோ அதை எழுது. ஆனா அதுக்கு சினிமா விமர்சனமின்னு போடாதய்யா…

படத்தைப் பற்றிய என் கருத்துக்கள், எண்ணம், பார்வை அப்படி வேற ஏதாவத பயன்படுத்துயா..

அத வுட்டுப்பூட்டு,  10 அல்ல்து 20 ரூபா துட்டுக்கு டிக்கெட்டு வாங்கி படத்தப் பார்த்துப்புட்டு என்னமோ நியூயார்க் டைம்ஸ் ரேஞ்சில விமர்சனமின்னு பேர போட்டு படத்தில உள்ள கதைய அப்படியே எழுதுறானுங்க. அதில வேற… அது சரியில்ல – இது சரியில்ல அப்படின்னு குரை வேற சொல்லுறது.

குறை கண்டுபுடிச்சா… பெரிய ஞானமுள்ளவருன்னு உங்கள எல்லாரும் நினைச்சுருவாங்களோ….

ஏய்யா அவனவன் கோடிக்கணக்கில பணத்தப் போட்டு படம் எடுக்குறாங்க. சும்ம மேட்டரில்லாமலா எடுப்பாங்க…  நீயி 20 ரூபா துட்டுக்கு இந்த வரத்து வரும் போது, இப்படி யோசிக்கும் போது, அவங்க எப்படியிய்யா யோசிப்பாங்க, படம் எடுப்பாங்க.

உனக்கு பிடிக்கலயின்னா அந்த படம் மொக்கை படமின்னு விமர்சனப் பதிவு வேற போடுறது. ஏய்யா இப்படி அலியிறே.

படம் பாக்குறீங்களா, அதுல உங்களுக்கு கிடைச்ச அனுபவத்தை போடுங்க. உங்களுக்கு புடிக்கலைன்னு பகிரங்கமா சொல்லுங்க. படம் சூப்பர்னு சொல்லுங்க… அத விட்டுப் போட்டு உலக மகா சினிமா விமர்சகர் போல ‘…………… – சினிமா விமர்சனம்’னு போட்டு அறிவு (இல்லா) ஜீவி தனத்தை காட்டாதீங்கோ.

இனியாவது குப்பறப்படுத்து யோசிச்சு (மண்டையில இருந்தாத் தான நல்ல விதமாத் தோண்ணும்) சினிமா விமர்சனம்ன்ற பேருல பதிவு எழுதுறத நிறுத்துங்கப்பா..!

ஒரு படம்… உன்னோட நிலைக்கு பொருந்தாத படமாக வேணுமின்னா இருக்கலாம். உனக்கு பிடிக்கலைன்னா எல்லோருக்கும் பிடிக்காதுன்னு தப்புக் கணக்கு போடாதய்யா…

ஒவ்வொருதருடைய ரசனையும் வெவ்வேறு விதாமாத்தானய்யா இருக்குது. அதனால, ஏதோ ஒரு விதத்தில மக்கள் மனசுல இடம் பிடிக்கனுமின்னு தான் ஒவ்வொரு டயிரடக்டரும் படம் எடுக்குறானுங்க.

ஏய்யா உங்களோட கருத்த எழுதுங்க, ஏத்துக்குவான் இந்த பிளாக்கன். அத விட்டுப்போட்டு விமர்சன்மின்னு எழுதாதப்பா…

இந்த மேட்டறல பிச்சைப்பாத்திரம் தான் பிளாக்கன் கண்ணுக்கு ஏதோ அமுத சுரபியா தெரியுதுய்யா. அவரோட இந்த பதிவு… பிளாக்கனுக்கு டியரு பதிவுய்யா… இதயும் படிங்கய்யா… பிச்சைப்பாத்திர டியரு பதிவு

Older Posts »

பிரிவுகள்