பிளாக்கன் எழுதியவை | ஜூலை 18, 2009

அனானிகள் என்ற மனநோயாளிகள்..!

நாளுக்கு நாள் அனானிகளின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கம்பியூட்டர் உலகை வைரஸ்கள் தாக்குவது போல பதிவுலகில் அனானிகள். இவர்களின் தாக்குதல் கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது என்று சொல்லலாம். இதுவரை அவர்களுக்கு பிடிக்காத பதிவர்களையும், பிடிக்காத பதிவுகளையும் தாக்குதல் நடத்தி வந்தார்கள்.

ஆனால், கடந்த சில நாட்களாக ஒருசில அனானிகள், பிரபல பதிவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.  அந்த பிரபல பதிவர்களால் அனானிகளுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை எனபது அனைவருக்கும் தெரிந்த விடயம். அப்படி இருக்கும்போது, பிரபல பதிவர்களை ஏன் அவர்களை தாக்கவேண்டும்?

இந்தவித தாக்குதலால், நல்ல எண்ணங்களை, தரமான கருத்துக்களை, உண்மையான செய்திகளை, வழ்க்கைக்கு தேவையான வாழ்வியல் முன்னேற்றங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த பதிவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள் என்று தெரிகிறது. அனானிகளின் செயலால் எல்லா பதிவர்களும் சில் பிரபல பதிவர்களின் நல்ல தரமான பதிவுகளை படிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடலாம்.

எந்தவிதமான எதிர்பார்ப்புக்களும் இல்லாமல், நல்ல பதிவுகளை கொடுக்கும் பதிவர்களை தாக்குவதால் இந்த அனானிகளுக்கு என்ன பயன்?
அனானிகள் யார்?
இவர்களின் லட்சியம் என்ன?

இவர்களுக்கு எந்தவிதமான லட்சியமோ / குறிக்கோளோ கிடையாது. இவர்களுக்கு நினைப்பது எல்லாம் மற்றவர்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும்.  இதனால், இவர்களுக்கு பயனும் கிடையாது.

யார் இந்த அனானிகள்?

யார் இந்த அனானிகள்? என்று ஆலசி ஆராயும்போது பலவகையான உண்மைகள் வெளிவருகிறது. இவர்கள் ஏதோ ஒருவிதத்தில் பாதிக்கப்பட்டவர்கள், திறமையில்லாதவர்கள், எதிர்த்து நின்று வாதம் செய்யும் தைரியம் இல்லாதவர்கள், பொறாமை கொள்பவர்கள், அவர்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டும் போது அதை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் இல்லாதவர்கள், மனிதனாக உடலளவில் இருந்தும் மனதளவில் 5 அறிவுள்ள விலங்குகள் என்ற தகவல்கள் வெளிவருகிறது. இதன் மூலம் இவர்களை ‘மனநோயளிகளின்’ என்று கூட சொல்லலாம்.

அனானிகளின்  லட்சியம் என்ன?

இந்த மனநோயாளிகளுக்கு லட்சியம் எல்லாம் கிடையாது. இவர்களால் முடியாத ஒரு விடயத்தை, வேறு யாரவது செய்யும் போது வெறுப்பு ஏற்படுகிறது. தங்களுடைய எரிச்சலை வெளிப்படுத்த அனானியாக மாறி பின்னூட்டம், மெயில் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். இதனால், இவர்களுக்கு அற்ப சந்தோஷம் கிடைக்கிறது. மற்றவருடைய வெறுப்பில் ஆனந்தப்பட்டு குளிர்காயும் ——————கள்.

அனானிகளை என்ன செய்யலாம்?,

1) அனானிகளிடம் இருந்து பின்னூட்டம் / மெயில் போன்றவைகள் வந்தால், அதை பொருட்படுத்த்க் கூடாது. பதிவர்கள் எந்தவித மன உளைச்சலுக்கும் ஆளாகவேண்டாம். தெரு ஓரத்தில் பைத்தியக்காரன் ஒருவன் இருந்தால் நாம் பரிதாபப் படுவோம். அதோபோல, இவர்களைப் பார்த்தும் பரிதாபப் படவேண்டும். ஏனென்றால், இவர்களும் அந்த பைத்தியக் காரன் போல மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்.

2) பதிவர்கள் பதில் பின்னூட்டம் இடவேண்டாம். திறமையில்லாத மனநோயளிகளாக உள்ள இந்த அனானிகளுக்கு நேரத்தை செலவு செய்யவேண்டாம். அவ்வாறு செய்யும் போது நமது தரமும் குறைந்து விடும் அல்லவா.

3) அனானிகள் இடும் பின்னூட்டங்களை அவர்களுடைய ஐ.பி முகவரியை வைத்து எளிதாக கண்டுபிடித்து விடலாம். அப்படி கண்டுபிடித்து விட்டால். அவர்க்ளை ஒண்றும் செய்யவேண்டாம். கீழ்ப்பாக்கம் அல்லது ஏர்வாடிக்கு ஒரு ரூபாய் செலவு செய்து போன் போட்டு தெரியப்படுத்தவும். மீதியை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

4) பதிவுர்களே உங்களுடைய நன்பர்கள் / தெரிந்தவர்கள் யாராவது அனானியாக இருப்பது தெரிந்தால், அவர்களுக்குத் தெரியாமல் மனநிலை மருத்துவரை அணுகி வைத்தியம் செய்ய ஏற்பாடு செய்யவும். பாவம், என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்கிறார்கள், பைத்திங்கள் அப்படித்தான் செய்யும் என்று நமக்குத் தெரியும் அல்லவா.

அனானிகளுக்கு :

நீங்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். பைத்தியங்களை தங்களை பைத்தியங்கள் என்று ஏற்றிக்கொள்ளாது என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் சொல்லவேண்டியது கடமை. நல்ல மனநிலை மருத்துவரை அணுகி உங்கள் நோயைக் குணப்படுத்தவும்.


மறுவினைகள்

  1. பிளாக்’கன்’,

    தெளிவான இடுகை. படிக்கும் அனானிகளுக்குக் கண்டிப்பாகப் புரிந்துவிடும் அவர்கள் யாரென்று. தொடரட்டும் உங்கள் மிரட்டல்.

    ஸ்ரீ….

  2. annanikal patri nalla yeluthi irukenga.

  3. ப்ளாகன், அனானிகள் குறித்த உங்கள் கருத்தில் சற்றே முரண்படுகிறேன். ஆபாசமாக, வக்கிரமாகப் பின்னூட்டம் போடுகிறவர்களைப் பற்றி சொல்லவரவில்லை. ஒரு நல்ல விஷயத்தைக் கூட அதை யார் சொல்கிறார்கள் என்பதைக் கொண்டு நிராகரிக்கிற சாயம் பூசுகிற புத்தி இங்கே பலருக்கு இருக்கிறது. அது போன்ற சமயத்தில் அனானி ஆப்ஷனே துணை. எல்லா அனானிகளையும் ஒரே தட்டில் வைத்து இப்படி ஒட்டு மொத்தமாகத் திட்டாதீர்கள் ப்ளாகன்.

    • vijaygopalswami சாரே………

      நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். அதேவேளையில் மாறுப்பையும் தெரிவிக்கிறேன். காரணம் தீவிரவாதிகள் என்று கூறிவிட்டு, நல்லது செய்வதற்காகத்தான் தீவிரவாதி ஆனேன் என்று சொல்வதைப்போல் உள்ளது உங்கள் கருத்து. நல்லது செய்தாலும், தீவிரவாதிகள் பட்டியலிலிருந்து நீக்கமுடியாதல்லவா.. ஆதேபோல நல்லது செய்வதற்காக, ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்காக, தவறு செய்பவர்களை தண்டிக்க என்று சொன்னாலும் அனானியாக மாறிவர்களை ‘அனானி’ பட்டியலில் இருந்து அகற்ற முடியாதல்லவா..

      எல்லா அனானிகளும் கெட்டவர்கள் என்று சொல்லவரவில்லை. அதேநேரட்தில் அவர்களும் அனானி தான் என்பதை மறுக்க முடியாது..

  4. சில அனானிகள் செய்வது சிலநேரம் வயிறுவலிக்கச் சிரிக்கவும் செய்கிறது. கடவுள் பாதி மிருகம் பாதி என்கிற நிலைதான். :)))

  5. //பதிவர்கள் பதில் பின்னூட்டம் இடவேண்டாம்//

    வழிமொழிகிறேன்


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்