பிளாக்கன் எழுதியவை | ஜூலை 13, 2009

பெண் பதிவர்களுக்கு ஒரு எச்சரிக்கை..! – பகீர் தகவல்

நேற்று (ஞாயிற்றுக் கிழமை) விடுமுறை என்பதால் நீண்ட நாட்களாக சந்திக்க முடியாமல் இருந்த சில நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடன் சில மணிநேரங்கள் கலந்துரையாடவும் நேர்ந்தது. யூத்கள் சிலர் (பிளாக்கனும் யூத்து தானப்பா… ஏத்துக்கேங்கப்பா…) சந்தித்தால் அரட்டை அடிப்பது தானே வழக்கம். ஆனால், அதற்கு மாறாக அந்த நேரத்தில் பிளாக் உலகம் பற்றிய பேச்சே அதிகமாக இடம் பிடித்தது. பிளாக் உலகம் என்றால் பிளாக்கனுக்கு அல்வா சாப்பிடுவது போல் அல்லவா..! (பிளாகன் யார்? எனப்து அவர்களுக்கு தெரியும்). அந்த நண்பர்களில் ஒருவர் நீண்ட காலமாக (பல ஆண்டுகளாக) பதிவுலகில் தமது பதிவுகளின் மூலம் திறமையை வெளிப்படுத்து கலக்கி வருபவர்.

பதிவுலகில் உள்ள அனுபவசாலிகளில் அவரும் ஒருவர் என்றே கருதுகிறேன். அவர் பேச்சுவாக்கில் சொன்னார் “பிளாக்கா.. சில ஆண் பிளாக் பதிவர்களும் / அனானிகளும் பிளாக் உலகில் உள்ள பெண் பதிவர்களை குறிவைத்து செயல்படுகிறார்கள். அவர்களுடைய நோக்கம், பெண் பதிவர்களை தங்களுடைய வலையில் சிக்க வைப்பதே ஆகும்” என்றார்.

பிளாக்கன் அதிர்ச்சிக்கு உள்ளானான்! அது எப்படி சாத்தியமாகும் என்ற எண்ணம் பிளாக்கன் மனதில் தோன்றியது. அப்படி இருக்க வாய்ப்பு இருக்காது என்று கருதி அவரிடமே கேட்டேன் “அது எப்படி முடியும்?, அப்படி பெண் பதிவர்களை வலையில் சிக்க வைக்க வாய்ப்பு இருக்கிறதா?” என்று அவரிடம் கேட்டபோது…

அவர் தமிழ் வழிகாட்டி கோனர் நோட்ஸ் போல விபரமாக விவரிக்க ஆரம்பித்தார்.  அதாவது, பிளாக் உலகில் இல்லாத சிலபேர் ஐ.டி மட்டும் (அனானி) உருவாக்கி வைத்து கொண்டு திரட்டிகளின் மூலம் பெண் பெயரில் உள்ள பதிவர்களின் பிளாக்குகளுக்கு சென்று, அந்த பதிவு நல்ல முறையில் இருந்தாலும் கூட, ஏதாவது ஒரு வரியை மட்டும் சுட்டிக்காட்டி எதிர் கருத்து போடுவார்கள். அதாவது “உங்களுடைய பதிவு அருமையாக உள்ளது . அதேவேளையில் என்னால் இந்த வரிகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த வரிகள் தவறானவை” என்று ஆரம்பிப்பார்களாம்.

சூழ்ச்சி பற்றி அறியாத பெண் பதிவர்களும் அவருடைய பின்னூட்டத்துக்கு மறுமொழி இடுவார்களாம். இவ்வாறாக தன்னுடய முயற்சியில் காய்களை நகர்த்துவார்களாம். அதேவேளையில் தான் ஒரு அறிவு ஜீவி  என்று நிரூபிப்பதையும் தவற விடமாட்டாராம்.  இந்த முறையில் அவரிடம் அறிமுகமாகி தன்னுடைய லீலையை நட்பு, தோழி, காதலி என்ற கோணங்களில் திசை திருப்பி, தன்னுடைய லீலையை எதிர் வரும் காலங்களில் ஆரம்பித்து விடுவார்கள். என்றார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஏற்கனவே பிளாக் எழுதிவரும் சில அனுபமிக்க நல்ல பதிவர்களும், தம்முடைய பொழுதுபோக்கிற்காக வேறு ஒரு அனானி ஐ.டி -யில் செயல்படுவதாகவும் சொன்னார். இந்த பதிவர்கள் பல வருடங்களாக பதிவுகள் எழுதுவதால் எளிதாக பெண் பதிவர்கள் பற்றி எல்லா விஷயங்களையும் தெரிந்துகொண்டு,  அதாவது, பல வருடங்களாக பதிவுகள் எழுதுவதால், பல பெண் பதிவர்க்ள் ஏற்கனவே அறிமுகமாகி இருப்பார்கள். அவருடைய பதிவுகளை தொடர்ந்து படித்து, பின்னூட்டம் இடும், அவருடைய வாசகராகவும் இருப்பார்கள்.

பின்னூட்டம் மூலம் அறிமுகமான பெண் பதிவர்களை, இவர்கள் அனானியாக மாறி தங்களுடைய வலையில் விழ வைக்க முயற்சி செய்கிறார்களாம்.

யாரோ ஒரு பதிவர் ( பெயர் சொல்ல விரும்பவில்லை ) பெண் பெயரில் உள்ள பிளாக் ஒன்றை பெண் என்று கருதி, பல மாதங்களாக முயற்சி செய்தாராம். அந்த பிளாக்-பதிவரும் அவருடன் கருத்துக்களை பரிமாறி, நட்பு என்ற நிலையில் சில வாரங்கள் சாட்டிங் கூட செய்தார்களாம். கற்பனை உலகில் மிதந்து கொண்டிருந்த அந்த பதிவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது, அதாவது யாரை பெண் பதிவர் அன்று எதிர்பார்த்து நேரத்தை சாட்டிங், பின்னூட்டம் என கழித்தாரோ, அந்த பதிவர் பெண் அல்ல ஆண்.  இப்போது நொந்து போய் பெண் பெயரில் உள்ள பிளாக்குகளை பார்த்தாலே அவருக்கு அலர்ஜியாம். இப்போது இரண்டு பேருமே நன்பர்களாக உள்ளார்களாம்.

இதன்மூலம் பெண் பதிவர்களுக்கு பிளாக்கன் தன்னுடைய கருத்தை முன் வைக்க விரும்புகிறான்.  வெளி உலகில் உள்ளது போல, பிளாக் உலகிலும் பல சிக்கல்கள் உள்ளது. அதனால், அறிவு பூர்வமாக பதிவுகளை எழுதும் நீங்கள் உங்கள் வாழ்க்கையிலும் அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்பட்டு, அனானிகளின் வலையில் சிக்காமல் உங்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள்.

தவறு செய்பவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றது போல அவர்களை மாற்றிக் கொள்வார்கள். அவர்களுக்கு தவறு செய்வதற்கு பலவகையான வழிகள் கிடைக்கும். எதைப்பற்றியும் கவலை கிடையாது. ஆனால், நல்லவர்களாக் இருப்பவர்களுக்கு ஒரே வழிதான். இதனால் தான் நல்லவர்கள் எளிதாக தவறான வலைகளில் சிக்கி தவிக்கிறார்கள்.

குறிப்பு : இந்த பதிவு ஆண் பதிவர்களை (பிளாக்கனும் ஆண் தான்) குற்றம் சொல்வதற்காகவோ அல்லது பிளாக் உலகை தவறு என்று சொல்வதற்க்காகவோ அல்ல . நடைமுறையில் உள்ள சில சிக்கல்களை எடுத்துச் சொல்வதற்காக மட்டுமே.   2% குறைவானவர்களே இதுபோன்ற தவறான முறைகளில் செயல்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் குறைவான பெண் பதிவர்களே பதிவுலகில் உள்ளார்கள். அவர்களை எச்சரிக்கையாக இருந்து, நல்ல பதிவுகளை எழுதுவதை ஊக்குவிப்பதற்காக மட்டுமே..!

இது பிளாக்கனின் கடமை, ஏனென்றால் பல பெண் பதிவர்களின் பதிவுகளில் இருந்தும், பல விஷயங்களை பிளாக்கன் படித்து தெரிந்து கொண்டவன் என்பதால் தான். கருத்துக்களுக்கு மறுமொழி இடுவதை தவிர்த்து விடாதீங்க. நல்ல நண்பர்கள் பலர் கிடைக்கும் போது சில கெட்டவர்கலும் அறிமுகம் ஆவார்கள். கெட்டவர்களுக்கு பயந்து உங்களுடைய வெற்றிப் பயணத்தை நிறுத்தி விடாதீர்கள். பயணத்தில் சில தடைக் கற்கள் வரத்தான் செய்யும். நாம் தான் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை : பிளாக்கனும் யூத்து தாம்மா… சில நேரத்தில அவனே அனானியா மாறி வந்து முயற்சி பன்னுவான். ஏமாந்துடாதிங்க.. எச்சரிக்கையா இருங்க..


மறுவினைகள்

  1. பொதுவாகவே ப்ளாககுகளைப்பற்றி அ திகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தெரிந்த ஆலோசனைகளைக் கொடுத்து வாருங்கள். எல்லோருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றாக எழுதுகிறீர்கள் எனக்கு அதிகம் ஒன்றும் தெரியாது.

    • வணக்கம் chollukireen சார்….

      உங்கள் கருத்துக்கு நன்றி.. நீங்கள் எதிர் பார்ப்பது போல தொடர்ந்து பல நல்ல பதிவுகள் எழுதுவேன்….

      ந்ன்றி
      பிளாக்கன்

  2. அக்கறை நிறைந்த பதிவு. தொடர்ந்து இம்மாதிரித் தரமான இடுகைகளை எதிர்பார்க்கிறேன். பெண் பதிவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட உதவும் வகையில் உள்ளது.

    ஸ்ரீ….

    • வணக்கம் ஸ்ரீ சார்….

      உங்கள் கருத்துக்கு நன்றி..
      நீங்கள் ஆரம்பம் முதலே ஊக்கப் படுத்து வருகிறீர்கள்.. நன்றி. நான் தொடர்ந்து நல்ல தரமான பதிவுகளை எழுதுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

      ந்ன்றி
      பிளாக்கன்


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்