பிளாக் எழுத ஆரம்பிச்சதுல இருந்து நான் (பிளாக்’கன்’) டெரர்…..ரா தான் வந்துக்கிட்டு இருந்தேன். என்னோட அடுத்த டியரு அவதாரத்தையும் காமிக்கனுமில்லா. இல்லேனா பதிவர்கள் என்னய்யா இவன் ஓவரா படுத்திக்கிட்டிருக்கானு நினைக்கக் கூடாதில்ல. அதான் இன்னைக்கு டியரா வந்துட்டன் பிளாக்’கன்’!
சரி யாருக்கூட டியரா இருக்கலாம்மின்னு நினைச்சதுமே… பிளாக்’கன்’ மனசில ஒருத்தரு கப்புன்னு வந்து குந்திக்கின்னாரு…. ஏன்னா அதுக்கு காரணம் இருக்கு. பிளாக்கனும் பல மாசங்களா அந்த பதிவரோட பதிவுகள் அம்புட்டையும் படிச்சுக்கிட்டிருக்கான். ஏன்னா பிளாக்கனுக்கே ரொம்ப பிடிச்சுப் போச்சு…………
பிளாக்கனுக்கெ பிடிச்சிருக்கின்னா பார்த்துக்கோங்க, எம்புட்டு நல்லா எழுதுவாருன்னு!
அவரு யாருன்னு சொல்லாம வளவளன்னு பேசிக்கிட்டு இருந்தா.. என்னய்யா விளாங்கத்தனமா பேசிக்கிட்டிருக்க… அது யாருன்னு சொல்லு ஃபஸ்டுன்னு கேட்டுப் புடுவீங்க… நானே சொல்லுதேன்.
அவரு யாருன்னா என்.கணேசன் (http://enganeshan.blogspot.com/). அவரு என்.கணேசன் கிடையாது. நம் கணேசன். அப்பிடி சொல்லிக்கிறதால பதிவர்கள் அனைவருக்குமே பெருமை தான்.
அவருடைய பதிவுகள் அம்புட்டும் ஊக்கப்படுத்துற விதத்திலேயும்… வாழ்க்கையில நம்பிக்கைய வர வைக்குற விததிலேயும் பிச்சு வாங்குறாரு மனுசன்.
பிளாக்’கன்’ கூட பல விசயங்களை நம் கணேசன் பிளாக் கில இருந்து மண்டைக்குள்ள ஏத்தியிருக்கான்………….
வாழ்க்கையில என்ன விஷயமின்னாலும் புரிஞ்சுக்கிடுறக்கு, உண்மைய தெரிஞ்சுக்கிடுறதுக்கு “மனம் விட்டு பேசுங்கள்” ன்கிற பதிவுல சூப்ப………….ரா சொல்லியிருக்காரு… அவரோட ஸ்டைலே வித்தியாசமா, எம்புட்டு மரமண்டையளுக்கும் புரியுற விதத்துல தெளிவா விளக்க கதைகளோட சொல்லுறாரு.
ஆனா நம்ப வேலவெட்டியில்லாம பிளாக்குல அலையுறவுங்க இத மாதிரி நல்ல பதிவுகளுக்கு ஓட்டுப் போட மாட்டெங்குறாங்க.. ஏன்? அந்தப் பக்கமே படிக்குறதுக்கு வரமாட்டேங்குறானுக…
ஏன்ன நாலு விஷயம் நல்ல விஷயம் தெரிஞ்சுக்கிடுவானுங்கல்ல அதுதான்.
ஆனா ஒன்னு மட்டும் பிளாக்’கன்’ சொல்லிக்கிடுறான். இத மாதிரி நல்ல பதிவுகளுக்கு கண்ண மூடிக்கின்னு ஓட்டுப் போடுங்கய்யா………
ஓட்டு போட்டாத் தானய்யா அவங்களும் ஆர்வத்தோட எழுதுவாங்க. நாமளும் நாலு விஷயம் தெரிஞ்சுக்க முடியும்..
நம். கணேஷன் சாரு பிளாக்’கன்’ எப்பவுமே உங்களுக்கு டியாரா இருப்பான்..
பிளாக்கனோட விருப்பம் : மிஸ்டர் கணேசன் உங்களோட அம்புட்டு பதிவுகளும் ஏதோ ஒரு வித்ததுல மனச தொட்டுப்புடுது. என்னை மாதிரி யூத்துகளுக்கு (நம்புனா நம்புங்க) ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு. அதனால நீங்க தொடர்ந்து பிளாக்குல எழுதணும். அதேபோல உங்களுடைய பதிவுகள் அனைத்தையும் புத்தகங்களாய் போட்டா இன்னும் என்ன மாதிரி ஆளுங்களுக்கு நல்ல பயனாய் இருக்குமின்னு சொல்லிக்கிடுறேன் சாரு……… இது பிளாக்கனோட ஆசை…!
Oru Je for Bloggun, I do not have a blog, I do read all his posts for quite some time and learnt so many things.
May be we need to check with some printers on this along with the permission from NUM Ganesan.
By: Diwakar on ஜூன் 4, 2009
at 2:06 முப
Diwakar சாரே………நன்றி
By: bloggun on ஜூன் 4, 2009
at 6:31 முப
அறிமுகத்துக்கு நன்றி.
By: pukalini on ஜூன் 10, 2009
at 1:06 பிப
தங்கள் நல்வார்த்தைகளுக்கு நன்றி. சென்னையில் இருந்து ஒரு பதிப்பகம் நீங்கள் சொன்னபடி என் கட்டுரைகளைப் புத்தகமாகப் போட முன் வந்துள்ளது. ஒரு ஆன்மீக புத்தகமும், சுய முன்னேற்ற புத்தகமும் வர உள்ளன. தங்களைப் போன்றோர் அன்பிற்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
– என்.கணேசன்
By: N.Ganeshan on ஜூன் 11, 2009
at 1:23 பிப
N.Ganeshan சாரே……
கொஞ்சம் பிசியாக இருந்ததால், உங்களுக்கு பதில் பின்னூட்டம் கூட போடமுடியவில்லை….
உங்கள் படைப்புக்கள் புத்தகங்களாக வர இருப்பதாக குறிப்பிட்டிருந்தீர்கள்.. நான் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன். அதேவேளையில் புத்தகங்கள் வரும் வேளையில், எந்த பிரசுரத்தில் வருகிறது என்பதையும் தெரியப் படுத்தவும்..
By: bloggun on ஜூன் 28, 2009
at 8:26 முப