பிளாக்கன் எழுதியவை | ஜூலை 17, 2009

Blogger Debut Award – புதிய பதிவர்களுக்கு மட்டும்..!

குதூகலத்தில் துள்ளிக் குதித்தேன். மட்டைப் பந்துப் போட்டியில் ஒரு மட்டை வீச்சாளர் 50 ஓட்டங்கள் பெற்றால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவாரோ, அதை விட பலமடங்கு மகிழ்ச்சி அடைந்தேன். திரைப்படம் ஒன்று திரையிடப்பட்டு வெற்றிகரமாக 50 நாட்கள் கடந்தால் அந்தப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர்கள் எவ்வளவு சந்தோஷம் அடைவார்களோ, அதைவிட பலமடங்கு சந்தோஷம் அடைந்தேன்.

காரணம், பிளாக்’கன்’ பதிவுலகில் கால் வைத்து இன்றுடன் 50 நாட்கள் முடிவடைந்துவிட்டது. 50 நாள் பயணமும் 50 வருட பயணம் போல் இருந்தது. அதாவது இந்த 50 நாள் பயணத்தில் பல வைகையான பதிவர்களைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொருவருடைய மனநிலை அறிய முடிந்தது, எழுத்தாற்றலை கவனிக்க முடிந்தது, பதிவர்களின் திறமையை நானும் பெற முடிந்தது. இப்படி 50 நாட்களும் பிளாக்கனுக்கு பல வகையான அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடிந்தது.

பயனாளராக உள்ளே வந்து பிளாக் படிப்பதை விட, ‘நானும் ஒரு பதிவர்’ என்று சொல்லிக்கொண்டு படிக்கும் போது கிடைக்கும் அனுபவம் வித்தியாசமான குதூகாலத்தை கொடுத்தது. இந்த 50 நாட்களை பிளாக்கனின் 50 வயது என்று கூட சொல்லலாம்.

ஒரு சில பதிவர்களைத் தவிர மற்ற பதிவர்கள் எல்லாருமே, எழுத்தாற்றலை ஊக்குவிக்க தவறவில்லை. பதிவுகளை இடும் போது அதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டி அதை திருத்திக்கொள்ள சிலர் உதவினர். இப்படியாக பிளாக்கன் 50 நாட்களைக் கடந்து விட்டான்.

பிளாக்கன் பதிவுலகில் கால் வைக்கும் போது, ஒரு கிராமத்து, தமிழ் எழுத்துமுறை தெரியாத, கிராமத்து ஸ்லாங்கில் பேசக்குடியவனாக, அதேவேளையில் தவறுகளை சுட்டிக்காட்டும் டெரராகத்தான் அறிமுகம் ஆனான்.

ஆனால், தற்போது அந்த ஸ்லாங்கை தவிர்த்து விட்டேன். “குற்றம் கண்டு பிடித்து பதிவர்களிடம் பெயர் எடுக்கலாம்” என்ற முடிவில் தான் பிளாக்கன் உருவானான். பெயரும் கிடைத்தது. ஆனால், பிளாக்கன் தன்னுடைய திறமையையும் நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால்,  அதைவிடுத்து சரியான தமிழில் எழுத ஆரம்பித்துவிட்டான்.

பிளாக்கன் பதிவுலகில் நுழையும் போது பல பதிவர்கள் ஆதரவு கொடுத்து ஊக்குவித்ததால் தான் டெரரோ.. டியரோ.. தொடர்ந்து எழுத முடிந்தது. உங்கள் ஆதரவு தான் எழுத வைத்தது.

ஆனால், பல பதிவர்கள் பிளாக் ஆரம்பித்து ஒருசில பதிவுகளுடன் நிறுத்திக் கொள்கிறார்க்ள். தொடர்ந்து எழுதுவதில்லை.

புதிதாக பிளாக் எழுத வரும் பதிவர்கள்/ இடையில் நிறுத்திக்கொள்ளும் பதிவர்களை தொடர்ந்து எழுதவைக்க வேண்டிய கடமை பிளாக்கனுக்கும் உண்டல்லவா.. இதனால் தான் பிளாக்கன் தன்னுடைய 50 நாள் பதிவை புதிய திட்டத்துடன் ஆரம்பிக்கிறான்.

awardjpgபுதிய பதிவர்களை ஊக்குவிக்கும் திட்டம்:

1) புதிய பதிவர்கள் எந்த துறையில் சந்தேகம் ஏற்பட்டாலும், எந்தநேரத்திலும் (24×7), பின்னூட்டம் அல்லது மெயில் மூலம் பிளாக்கனிடம் கேட்கலாம். அவர்களுடைய சந்தேகங்கள் பிளாக்கன் குழுவால் தீர்த்து வைக்கப்படும்.

2) புதிதாக வரும் பதிவர்களை ஊக்குவிக்க, அவர்கள் ஒரு மாதத்துக்குள் எழுதிய பதிவுகளின் தரத்தின் அடிப்படையில், “Blogger Debut Award” என்ற சிறப்பு விருது அளிக்கப்படும். இந்த அவார்டை அளிக்கும் உரிமை பதிவுலகில் 50 நாட்களுக்கு மேல் பதிவுலகில் வலம் வரும் பதிவர்கள் அனைவருக்குமே உண்டு.

இது புதிய பதிவர்களை ஊக்குவிக்கும் முயற்சி. ஏற்கனவே எழுதும் பதிவர்கள் தங்கள் ஆதரவைத் கொடுத்து பிளாக்கனின் பணிக்கு உதவலாம்.

பிளாக்கனின் கையால் Blogger Debut Award பெறும் முதல்  இரண்டு பதிவர்கள்…

1. ஒருவன்உன்னைப் போன்றவன்!

2. மனம் திறந்து


மறுவினைகள்

 1. பிளாக்”கன்”,

  நல்ல நோக்கம். தொடர்ந்து நீங்களும் எழுதுவதோடு புதிய பதிவர்களையும் உற்சாகப்படுத்துவது மகிழ்ச்சி. நீங்கள் குறிப்பிட்ட பதிவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். எழுத்துத் தமிழில் தொடர்ந்தாலும் பேச்சுத் தமிழால்தான் நீங்கள் பிரபலமடைந்தீர்கள். எனவே அதை முழுமையாய்க் கைவிட வேண்டாம். (எனக்கு எந்த விருதும் இல்லையா?) 🙂

  ஸ்ரீ….

  • பதிவுலகில் வலம் வரும் அனுபவமிக்க பதிவர்களுல் நீங்களும் ஒருவர் என்றே கருதுகிறேன். புதிய பதிவர்களை ஊக்கப்படுத்துவதிலும் நீங்கள் தவறயதில்லை என்றே எண்ணுகிறேன். பிளாக்கன் பதிவுலகில் சில மாதங்களாகவே வலம் வருகிறான். பிளாக்கனுக்கு நீங்கள் தான் விருது வழங்கவேண்டுமே தவிர உங்களுக்கு விருது வழங்க, பிளாக்கனுக்க அனுபவம் குறைவு என்றே நினைக்கிறேன்.

   உங்களின் வேண்டுகோளை ஏற்று ஒருசில பதிவுகள் பிளாக்கனின் பேச்சு வழக்கிலும் எழுத முயற்சி செய்கிறேன்

   நன்றி

 2. நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்……

 3. பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

  அன்புள்ள சகோதரர் Bloggan அவர்களுக்கு
  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு

  தங்களின் வேர்டுபிரஷ் மிக அருமையாக உள்ளது

  இதை எந்ததெந்த ஊடகங்களில் பதிவு செய்தால் இது முன்னேரும் என்பதை நான் அறிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன் ஏனெனில் நானும் கீழ்கண்ட வேர்டு பிரஷ்-ஐ வடிவமைத்துள்ளேன் அதை மக்கள் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!

  மேலும் என்னுடைய வேர்டுபிரஷ்-ஐ தமிழ்மணம் என்ற ஊடகத்தின்வாயிலாக வெளியிட்டு என் தாவா வளைப்பு-வை பரப்பி வருகிறேன்!

  http://islamicparadise.wordpress.com/ (இதை கிளிக் செய்யவும்)

  எனக்கு இந்த வேர்டுபிரஷ் வடிவமைப்பதில் சில சிக்கல்கள் தென்படுகின்றன அதாவது புகைப்பட இமேஜ்களை சரிவர அமைக்கமுடியவில்லை. தங்களுக்கு இதைப்பற்றிய அனுபவமுள்ளதா? தெரியப்படுத்தவும்! மேலும் WP_Thamizmanam_Toolbar.php என்ற டுல்பார் எவ்வாறு எனது வேர்டுபிரஷில் இணைப்பது என்பதையும் தெரிவிக்கவும் ஏனெனில் எனக்கு ஆங்கில அறிவு குறைவு!

  என் சமுதாயத்தில் கறைகளையும், தவறான கருத்துக்களையும் போக்கி முன்புபோல் நல்ல சகோதரத்துவத்தை அனைத்து சமுதாயத்திடமும் பரப்பும் நலனுக்காகவே நான் இந்த அளவிற்கு ஈடுபாடு காட்டுகிறேன் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்!

  அன்புடன்
  சிராஜ்
  சேலம் மாவட்டம்

 4. நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்……

 5. நல்ல ஊக்கம்

  தொடரட்டும் …

  • ஜமால் A M சாரே…….

   உங்கள் வருகைக்கும், பாராட்டுதலுக்கும் நன்றி

 6. மிக்க நன்றி நண்பரே!

  எனக்கு யாரையும் தெரியாது.

  யார்ன்னா புதுசா கண்ல பட்டா நானும் கொடுக்கிறேன்.

  நண்பர்கள்தின வாழ்த்துக்கள்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: