என்னுடைய முதல் நகைச்சுவை ‘முயற்சி’க் கட்டுரையை வெளியிட்டதுக்கு யூத்ஃபுல் விகடனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு, இந்திய ராணுவத்தில் கெளரவ கர்னல் பதவி வழங்கப்பட்ட செய்தியை கேள்விப்பட்ட போது, மகிழ்ச்சியடைந்தேன். மகிழ்ச்சிக்கான காரணம் அவருடைய பல படங்களைப் பார்த்து நானும் ரசித்திருக்கிறேன்.
இந்த இடத்தில் நமது கேப்டன் விஜயகாந்த்தை களமிறக்கி, நகைச்சுவையாக கட்டுரை எழுதி முடித்து, யூத்ஃபுல் விகடனுக்கு அனுப்பினேன். அதை உடனே தேர்வு செய்து சூடு தணிவதற்குள் ‘விட்’ பகுதியில் வெளியிடப்பட்டதைக் கண்டு மனம் மகிழ்ந்தேன்.
என்னைப் போன்ற யூத்துகளின் (நம்புங்கப்பா!!) படைப்பாற்றலை ஊக்குவிக்கும் யூத்ஃபுல் விகடனுக்கும், என் பதிவுகளை ஏற்றுக் கொள்ளும் திரட்டிகளுக்கும், இதற்கும் மேலாக தொடர்ந்து எனது பதிவுகளைப் படித்து பயன் பெறும் சக பதிவர்கள் (பொய்யி பொய்யி பொய்யி..) ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி.
அந்த நகைச்சுவைக் கட்டுரைக்கான லிங்க் இதோ… “கேப்டனை விட மோகன்லால் சாதித்தது என்ன?!! – ஒரு கொந்தளிப்பு் கடிதம்!”
இந்த நேரத்தில் ஓர் ஏமாற்றத்தையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். நான் மிகவும் சிரத்தையுடன், முதல் முதலாக தரமான பதிவு என்று கருதி எழுதிய ஒரு பதிவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் இல்லை.
அந்தப் பதிவு… பசங்க – விமர்சனம் அல்ல; பிளாக்கனின் பார்வை மட்டுமே!
மீண்டும் நன்றி. நன்றி. நன்றி………………..
உங்கள் படைப்பு யூத்ஃபுல் விகடனில் படித்தேன். நல்ல நகைச்சுவைப் பதிவு. வாழ்த்துகள்
By: Senthilvelan on ஜூலை 11, 2009
at 5:03 முப
வாழ்த்துக்கள் பிளாக்”கன்”. இன்னும் பல வெற்றிகளைப் பெற!
ஸ்ரீ….
By: ஸ்ரீ.... on ஜூலை 11, 2009
at 8:30 முப