பிளாக்கன் எழுதியவை | ஜூலை 9, 2009

அதிர்ச்சி தரும் பதிவர்கள்… எரிச்சலில் பிளாக்கன்..!

நேரம் கிடைக்கும் போது பிளாக்கர்களின் பதிவுகளைப் படிப்பது பிளாக்கனின் உருப்படியான பொழுதுபோக்கு. நேற்று வலைப்பதிவு திரட்டிகளில் சுற்றி திரிந்து பல பதிவுகளைப் படித்தேன். சில பதிவுகள் பிளாக்கனின் இதயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. நல்ல கருத்துக்களை, நல்ல விஷயங்களை அவர்களுடைய எண்ணங்களுடன் கலந்து சுவையாக கொடுத்து, படிப்பவர்களை உணர்ச்சிவசப்பட வைக்கக்கூடிய விதத்தில் இருந்தன.

அந்த நல்ல பதிவுகளின் சில வரிகள் பிளாக்கனின் உணர்வுகளுடன் உறவாடிக்கொண்டிருந்த அந்தவேளையில் ஒருவித நெகிழ்வுடன் திரட்டிகளில் மற்றைய பதிவர்களின் பதிவுகளைத் தேடி அலைந்தபோது, பிளாக்கன் ஒருசில பதவர்களின் பிளாக்குகளுக்கு செல்ல நேர்ந்தது.

அந்த பதிவுகள் பிளாக்கனுக்கு அதிர்ச்சி கலந்த கோபத்தை உருவாக்கியது. அந்தப் பதிவர்கள் அப்படி என்ன எழுதினார்கள்? பாலியல் சம்மந்தமாக எழுதப்பட்டிருந்தது. பாலியல் சம்மந்தமாக எழுதுவது தவறா?

பாலியல் சம்மந்தமாக எழுதுவது தவறு கிடையாது. அதில் அனுபவம் வாய்ந்த வல்லுனர்கள், ஆழ்ந்த வாசிப்பும் அனுபவமும் உள்ளவர்கள் எழுதலாம். கண்டிப்பாக சமூகத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த அது தேவை. அப்படி இருக்கும் போது பிளாக்கனுக்கு ஏன் கோபம் வர வேண்டும்?

கோபத்திற்கான காரணம் என்னவென்றால் அந்தப் பதிவுகளில் கதைகள் எழுதுவது போல எழுதி, செக்ஸ் நேரிடையாக நடப்பதுபோல வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பதிவுகள் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் இருந்தது. அதிலும் திரட்டிகளில் நடைமுறையில் உள்ள கதை போல தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. லீடிலும் எந்தவிதமான தவறான கருத்துக்களையும் பயன்படுத்தப்படவில்லை.

எவ்வளவோ நல்ல விஷயங்களின் பதிவுகளை எழுதி திரட்டிகளில் கொடுக்க இருக்கும்போது,  இதுபோன்ற பதிவுகள் நல்ல சில பதிவர்களின் மனநிலையையும் கெடுக்கும் விதமாக இருப்பது வேதனைக்குரியதாக உள்ளது. பாலியல் சந்தேகங்கள், நிபுணர்களின் கருத்து, கேள்வி-பதில் இது கண்டிப்பாக அவசியமான ஒன்று. அதை தவிர்த்து வேறுவிதமானவை தேவையில்லாதவையாகவே நான் கருதுகிறேன்.

அதேநேரத்தில் செக்ஸ் கதைகள் எழுதுபவர்கள் எழுதலாம், ஆனால், திரட்டியில் போட்டு பதிவர்களின் மனநிலையை மாற்ற வேண்டாம் எனபதை முன் வைக்கவே இந்த பதிவை இடுகிறேன். திரட்டிகள் என்பது பதிவார்கள் எல்லோரையும் ஒன்று சேர்க்கும் ஒரு பாலமாக செயல்படுகிறது. இலவசமாக திரட்டிப் பணிகளை செய்பவர்களுக்கு நாம் நன்றியை சொல்லவேண்டிய நிலையில் உள்ளோம்.

அதேநேரத்தில் தவறான முறையில் பயன்படுத்தும் ஒருசில பதிவர்களால் திரட்டி உருமையாளார்களர்கள் உட்பட பதிவர்கள் அனைவருமே பாதிப்பை சந்திக்க நேரிடும் நிலை ஏற்படலாம். அதனால் தான் என் மன எரிச்சலை இங்கே பதிவாக இடுகிறேன்.

பிளாக்கன் அவனுடைய ஸ்லாங்கில் ஆரம்பிக்கலாம் என்று எண்ணித்தான் தொடங்கினான். ஆனால், வேண்டாம் நல்ல முறையில் சொல்ல வேண்டும் என்பதற்காக ஸ்லாங்கை மாற்றி எழுதுகிறான்.

இந்தப் பதிவில் தனிப்பட்ட முறையில் எந்த பதிவர்களையும் குறிப்பிடவில்லை.  அப்படி குறிப்பிட்டு யாருடைய மனசையும் புண்படுத்த விரும்பவில்லை. இன்னொரு காரணமும் உண்டு, தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டால், அந்த நபர் அடுத்த நிமிஷமே அனானியாக மாறிவிடுகிறார். அதன்பின் அனானி தொல்லை பிளாக்கனுக்கு கொசுத்தொல்லை மாதிரி மாறிவிடுகிறது.

கொசுத்தொல்லையை நிறுத்த பிளாக்கனும் களத்தில் இறங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அதன்பின் பிளாக்கனும் அந்த நபருக்கும் இடையில் டெர.ர்………ர்…….ர் ஆரம்பமாகிவிடும்.

சரி மேட்டருக்கு வருவோம், டீட்டெய்லா சொல்லிப்பூட்டேன். அய்யா பதிவர்களே…….. கொஞ்சம் யோசிச்சு நல்ல விதமா எழுதுங்க… அத விட்டுப்பூட்டு இல்லய்யா நான் அப்பிடித்தேன் பாலியல தூண்டுற கதையத்தான் எழுதுவேன். அத வச்சுத்தேன் என்னோட பிளக்க ரன் பண்ணமுடியுமுன்னு லா………..லா………….  பேசினா அம்புட்டுத்தான் பிளாக்கன் டெரர….ரா களத்துல இறங்கிடுவான். டெர…ரா இறங்கிட்டா எதுக்கும் கவலப்படமாட்டான்..

தனிப்பட்ட முறையிலையும் தாக்குவான், மொத்தமாயும் தாளிப்பான்.  ஏப்பா இதோட அந்த கதைகள நிறுத்திப்புடிங்கப்பா…………..

(குறிப்பு : வலைப்பதிவுகளை தவறாக பயன்படுத்தும் 10%-க்கும் குறைவானவர்களைப் பற்றியதேயன்றி, ஒட்டுமொத்த வலையுலகும் இங்கு முன்வைக்கப்படவில்லை)


மறுவினைகள்

 1. யார் யார் பதிவுகளைப் படித்து பாதிப்பு ஏற்பட்டது எனக் குறிப்பிட்டிருக்கலாமே? திருந்தாதவர்களுக்கு என்ன தண்டனை ???? நல்ல எச்சரிக்கை!

  ஸ்ரீ….

  • ஸ்ரீ…. சாரே…..

   பதிவர்கள் யார் என்று குரிப்பிட்டு தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்த விரும்பவிலை..

   நன்றி

 2. ஒரு எழுத்தாள டம்மி பீசு கூட அனாமதேய ப்ளாக் ஐடி வச்சு இப்படி எழுதிக்கிட்டிருக்கு. முடிஞ்சா அதப் பத்தியும் கொஞ்சம் கிழிங்களேன்…

  • vijaygopalswami .. சாரே

   அந்தா ஆளு யார் என்று எனக்கு மெயில் பன்னினால், பதிவு இடுவது பற்றி தீர்மானிக்கலாம்

   நன்றி

 3. டியர் பிளாக்கன்
  யாரைச் சொல்கிறீர்கள் என்று குழம்ப வேண்டியிருக்கு.தைரியமாக உதாரணங்களை வைத்து எழுதியிருக்கலாமே.நாங்களும் வேலை மெனக்கெட்டு உலாவச் சொல்றீங்களா?
  தர்மினி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: