பிளாக்கன் எழுதியவை | ஜூன் 27, 2009

சினிமா விமர்சனம் போடுற பதிவர்களுக்கு ஒரு டெரரு பதிவு!!!

பிளாக்கன் யின்னா காணாம போயிட்டானான்னு, பல பேரு நினைக்கிறாங்க..  என்ன பண்ணுறது கொஞ்சம் பிசி ஆகிட்டான் அம்புட்டுத்தேன்.

சரிங்க, மேட்டருக்கு வருவோம். பதிவர்கள் பலபேரு விமர்சனம் எழுதுறாங்க. படத்தப் பாக்குறாங்க – எழுதுறாங்க… அத ஏத்துக்கிலாம். ஆனா அவுங்க பண்ணுற காமிடிக்கு ‘சினிமா விமர்சனம்’ ன்னு வேற போடுறாங்க…

ஏய்யா சினிமா விமர்சனமின்னா என்னென்னு தெரியுமாய்யா?

முதல்ல விமர்சனம் எழுதுறதுக்கான விதிமுறைகளை முழுசா படிங்கய்யா..!

ஒரு விமர்சனத்தோட அடிப்படை விஷயமே… முதல்ல அந்தப் படத்துக்கு தணிக்கைக்குழு தந்த சர்டிபிகேட்டு என்னன்னு மென்ஷன் பண்ணனும். யு-வா, யு/ஏ-வா, ஏ-வான்னு.. இத போட்டுப்புட்டுதான் மத்த விஷயத்தை தொடங்குணும். இதுவரைக்கும் யாராவது போட்டிருக்கீங்களா?

சினிமா விமர்சனம் எழுதுவது எப்படி என்பது பற்றிய பல நல்ல புத்தகம் கிடைக்குதுய்யா. அதையெல்லாம் தேடிபுடிச்சு வாங்கிட்டு தெரிஞ்சுகிட்டு, சினிமா உலகத்தை ஆழமா பார்க்க ஆரம்பிச்சுட்டு அப்புறம் சினிமா விமர்சனம் எழுதுங்கய்யா!

பதிவர்கள் எழுதறதெல்லாம் விமர்சனம் கிடையாதுய்யா.. அதுக்கு பதிலா வேற பேர பயன்படுத்துய்யா…  அதுவும், படத்தப் பார்த்துப்பூட்டு ( ரசிச்சு பார்க்கணுமய்யா). நாலு விதத்திலயும் அலசி ஆராய்ஞ்சு. உன்னோட மூளையில என்ன தோணுதோ அதை எழுது. ஆனா அதுக்கு சினிமா விமர்சனமின்னு போடாதய்யா…

படத்தைப் பற்றிய என் கருத்துக்கள், எண்ணம், பார்வை அப்படி வேற ஏதாவத பயன்படுத்துயா..

அத வுட்டுப்பூட்டு,  10 அல்ல்து 20 ரூபா துட்டுக்கு டிக்கெட்டு வாங்கி படத்தப் பார்த்துப்புட்டு என்னமோ நியூயார்க் டைம்ஸ் ரேஞ்சில விமர்சனமின்னு பேர போட்டு படத்தில உள்ள கதைய அப்படியே எழுதுறானுங்க. அதில வேற… அது சரியில்ல – இது சரியில்ல அப்படின்னு குரை வேற சொல்லுறது.

குறை கண்டுபுடிச்சா… பெரிய ஞானமுள்ளவருன்னு உங்கள எல்லாரும் நினைச்சுருவாங்களோ….

ஏய்யா அவனவன் கோடிக்கணக்கில பணத்தப் போட்டு படம் எடுக்குறாங்க. சும்ம மேட்டரில்லாமலா எடுப்பாங்க…  நீயி 20 ரூபா துட்டுக்கு இந்த வரத்து வரும் போது, இப்படி யோசிக்கும் போது, அவங்க எப்படியிய்யா யோசிப்பாங்க, படம் எடுப்பாங்க.

உனக்கு பிடிக்கலயின்னா அந்த படம் மொக்கை படமின்னு விமர்சனப் பதிவு வேற போடுறது. ஏய்யா இப்படி அலியிறே.

படம் பாக்குறீங்களா, அதுல உங்களுக்கு கிடைச்ச அனுபவத்தை போடுங்க. உங்களுக்கு புடிக்கலைன்னு பகிரங்கமா சொல்லுங்க. படம் சூப்பர்னு சொல்லுங்க… அத விட்டுப் போட்டு உலக மகா சினிமா விமர்சகர் போல ‘…………… – சினிமா விமர்சனம்’னு போட்டு அறிவு (இல்லா) ஜீவி தனத்தை காட்டாதீங்கோ.

இனியாவது குப்பறப்படுத்து யோசிச்சு (மண்டையில இருந்தாத் தான நல்ல விதமாத் தோண்ணும்) சினிமா விமர்சனம்ன்ற பேருல பதிவு எழுதுறத நிறுத்துங்கப்பா..!

ஒரு படம்… உன்னோட நிலைக்கு பொருந்தாத படமாக வேணுமின்னா இருக்கலாம். உனக்கு பிடிக்கலைன்னா எல்லோருக்கும் பிடிக்காதுன்னு தப்புக் கணக்கு போடாதய்யா…

ஒவ்வொருதருடைய ரசனையும் வெவ்வேறு விதாமாத்தானய்யா இருக்குது. அதனால, ஏதோ ஒரு விதத்தில மக்கள் மனசுல இடம் பிடிக்கனுமின்னு தான் ஒவ்வொரு டயிரடக்டரும் படம் எடுக்குறானுங்க.

ஏய்யா உங்களோட கருத்த எழுதுங்க, ஏத்துக்குவான் இந்த பிளாக்கன். அத விட்டுப்போட்டு விமர்சன்மின்னு எழுதாதப்பா…

இந்த மேட்டறல பிச்சைப்பாத்திரம் தான் பிளாக்கன் கண்ணுக்கு ஏதோ அமுத சுரபியா தெரியுதுய்யா. அவரோட இந்த பதிவு… பிளாக்கனுக்கு டியரு பதிவுய்யா… இதயும் படிங்கய்யா… பிச்சைப்பாத்திர டியரு பதிவு


மறுவினைகள்

 1. நல்ல சொன்னீங்க நண்பா

  • Anandhan சாரே……

   உங்கள் வருகைக்கு நன்றி

 2. முட்டையிட கோழிக்குத்தான் பிட்டி வழி தெரியும் ஆம்லட் போட்டு திங்கறவனுக்கு என்ன ?

  அண்ணா கரக்ட்ங்களா ?

  கட்டபொம்மன்

  http://kattapomman.blogspot.com

  • கட்டபொம்மன் சாரே……….

   உங்கள் வருகைக்கு நன்றி…………..

   நீங்கள் சொன்னது கரெக்ட் சாரு…

 3. நல்ல சொன்னீங்க நன்றி

  • உழவன் சாரே…….

   உங்கள் வருக்கைக்கு நன்றி………

 4. Super Review.

  • Bala சாரே……….

   உங்கள் வருகைக்கு நன்றி

 5. வணக்கம் பிளாக்கன்,

  என்ன உங்களுக்கு சொந்தமா வேற எதுவும்
  எழுத தெரியுதா?
  நானும் கொஞ்ச நாளா பார்க்குறேன் கொஞ்சம்
  ஓவர்ஆ தான் போறீர்?
  ஒன்னு நீங்க ஏதாவது சொந்தமா எழுதுங்க
  அதை உட்டுட்டு, அடுத்தவன் எழுதறதுல
  குறை சொல்லி ப்ளாக் எழுதறது ஒரு
  கேவலமான விஷயம். நீங்க டெர்ரர் ஆசாமியா?
  இல்ல காமெடி பீஸ்ஆ?……
  போய் புள்ளை கூட்டிங்கள படிக்க வைங்கப்பா…..

  • ஜெட்லி சாரே………

   வணக்கம் சொல்லிகினேன்.

   சாரே… தப்பா புரிஞ்சுக்கின்னீங்க போல இருக்கு… அல்லது நீங்களும் சினிமா விமர்சனம் போடுற ஆளாய்யா…………..

   ஏய்யா, கோடி கோடியா படம் எடுத்து ரீலிஸ் பன்னுறானுங்க.. நீங்க 30 ரூபா துட்ட கொடுத்து ( அல்லது ஓசி) படம் பார்த்துட்டு சரியில்லயின்னு குறைசொல்லிறது………….

   அதுவும் சினிமா விமர்சனமின்ன யின்னா? -ன்னு தெரியாத பயபுள்ளைக எல்லாம். எழுதுறானுங்க.. அத பார்த்துக்கிட்டு……….. பிளாக்க்கன் சும்மா இருக்க மாட்டான் சாரே…………….

   சினிமா விமர்சனமின்ன என்னென்னு தெரிஞ்சுக்கிட்டு நல்ல விதமா எழுதுங்க.. நானும் ஏத்துக்கிடுறேன்………….

 6. பிளாக்கன்,

  ஹோ… நான் விமர்சனம்னு தான் போடுவேன்,
  எனக்கு என்ன தோணுதோ அதை தான் எழுதுவேன்.அதை நான் எல்லாரும் ஏத்துக்கணும்னு சொல்ல மாட்டேன்.

  ஆனா நீ ரொம்ப ஓவரா சவுண்ட் உடுற……

  சரிப்பா நான் உன் வழிக்கே வரேன்,
  நீ ஒரு படத்தை பாரு(பிளாக்கன் ஒரு வேளை
  ஓசியில் கூட்டிபோனால் தான் பார்ப்பார் போல).
  விமர்சனம் எழுது, அப்போதான் உனக்கு இத
  பத்தி பேச தகுதி இருக்கானு பாப்போம்.

  சும்மா சும்மா அடுத்தவனை புடிச்சி நோண்டுருதல
  ஒன்னும் ஆக போறதில்லை.நாங்கெல்லாம் 120 ரூபாய்
  கொடுத்து படம் பாக்கறோம் நீ dvdல படம் பாக்கறவன் இல்லன ஓசியில எவனாது கூட்டிட்டு போன தியேட்டர் பக்கம் போறது……

  அப்புறம் இது வரைக்கும் நீ எதாவது சொந்தமா யோசிச்சு
  எழுதிரிக்கியா?……

  அடுத்தவனை நொல்லை சொல்லி காலத்தை ஓட்டும்
  எங்கள் அண்ணன் பிளாக்கன் வாழ்க……

  • ஜெட்லி சாரே………

   நீங்க உங்க கருத்த எழுதலாம். அது தப்பு கிடையாதுன்கோ………….

   அதேநேரத்தில அந்த பதிவு அடுத்தவங்க வயித்தில அடிக்கிற மாதிரி இருக்கக் கூடாதுன்கோ………

   நீங்க 120 ரூபா துட்டு (கறுப்பு பணம் / கள்ள நோட்டு) கொடுத்து பார்த்திட்டு எழுதுற விமர்சனத்தினால. பல ரசிகர்கள் ப்டம் மொக்கையின்னு நினைச்சி அவனுங்களும், அவனுங்களால முடிஞ்ச அளவுக்கு மார்க்கெட்டிங்க் பன்னி ரசிகர்களோட எண்ணிக்கைய குறைக்கிறாங்கன்னு தேன் சொன்னேன்….

   நீங்க 120 ரூபா துட்டு (கறுப்பு பணம் / கள்ள நோட்டு) கொடுத்திட்டு இந்த வரத்து வரும்போது…. கோடிக்கணக்குள பணம் போட்டு எடுத்தவங்க மனசு என்னாகுமய்யா……..

   கொஞ்சம் மனிதத்தன்மையோட மண்டையில போட்டு அலிசிப்பாருய்யா புரியும்…………

   நல்லது பண்ண முடியாவிட்டாலும், கெட்டது செய்யாமல் இருக்க கத்துக்கனுமய்யா………

   சில விசயங்கள் நமக்கு நல்லது மாதிரித்தான் தோன்னும் ஆனால், நமக்கு தெரியாமலே சில பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதையெல்லாம் கொஞ்சம் மனிதத் தன்மையோட யோசிச்சுப் பார்க்கனுமய்யா……..

   டெரர்……… பிளாக் ‘கன்’

 7. பிளாக்கன்,

  ஹோ… நான் விமர்சனம்னு தான் போடுவேன்,
  எனக்கு என்ன தோணுதோ அதை தான் எழுதுவேன்.
  அதை நான் எல்லாரும் ஏத்துக்கணும்னு சொல்ல மாட்டேன்.

  ஆனா நீ ரொம்ப ஓவரா சவுண்ட் உடுற……

  சரிப்பா நான் உன் வழிக்கே வரேன்,
  நீ ஒரு படத்தை பாரு(பிளாக்கன் ஒரு வேளை
  ஓசியில் கூட்டிபோனால் தான் பார்ப்பார் போல).
  விமர்சனம் எழுது, அப்போதான் உனக்கு இத
  பத்தி பேச தகுதி இருக்கானு பாப்போம்.

  சும்மா சும்மா அடுத்தவனை புடிச்சி நோண்டுருதல
  ஒன்னும் ஆக போறதில்லை.நாங்கெல்லாம் 120 ரூபாய்
  கொடுத்து படம் பாக்கறோம் நீ dvdல படம் பாக்கறவன் இல்லன ஓசியில எவனாது கூட்டிட்டு போன தியேட்டர் பக்கம் போறது……

  அப்புறம் இது வரைக்கும் நீ எதாவது சொந்தமா யோசிச்சு
  எழுதிரிக்கியா?……

  அடுத்தவனை நொல்லை சொல்லி காலத்தை ஓட்டும்
  எங்கள் அண்ணன் பிளாக்கன் வாழ்க……

  • ஜெட்லி சாரே………

   நீங்க உங்க கருத்த எழுதலாம். அது தப்பு கிடையாதுன்கோ………….

   அதேநேரத்தில அந்த பதிவு அடுத்தவங்க வயித்தில அடிக்கிற மாதிரி இருக்கக் கூடாதுன்கோ………

   நீங்க 120 ரூபா துட்டு (கறுப்பு பணம் / கள்ள நோட்டு) கொடுத்து பார்த்திட்டு எழுதுற விமர்சனத்தினால. பல ரசிகர்கள் ப்டம் மொக்கையின்னு நினைச்சி அவனுங்களும், அவனுங்களால முடிஞ்ச அளவுக்கு மார்க்கெட்டிங்க் பன்னி ரசிகர்களோட எண்ணிக்கைய குறைக்கிறாங்கன்னு தேன் சொன்னேன்….

   நீங்க 120 ரூபா துட்டு (கறுப்பு பணம் / கள்ள நோட்டு) கொடுத்திட்டு இந்த வரத்து வரும்போது…. கோடிக்கணக்குள பணம் போட்டு எடுத்தவங்க மனசு என்னாகுமய்யா……..

   கொஞ்சம் மனிதத்தன்மையோட மண்டையில போட்டு அலிசிப்பாருய்யா புரியும்…………

   நல்லது பண்ண முடியாவிட்டாலும், கெட்டது செய்யாமல் இருக்க கத்துக்கனுமய்யா………

   சில விசயங்கள் நமக்கு நல்லது மாதிரித்தான் தோன்னும் ஆனால், நமக்கு தெரியாமலே சில பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதையெல்லாம் கொஞ்சம் மனிதத் தன்மையோட யோசிச்சுப் பார்க்கனுமய்யா……..

   டெரர்……… பிளாக் ‘கன்’

 8. முதல்ல நீங்களே உஙக் பதிவ டெரர்னு சொல்றத பத்தி நாங்க என்ன சொல்ல. சுய விமர்சனம்னு சொல்லலாமா..? ஞாயமா பார்த்தா.. டெரரா இல்லையான்னு படிச்சி, நாங்கள்ள சொல்லணும்..?

 9. பிளாக்கன் அய்யா நீங்க போய் மொதல்ல
  முத்திரை படத்த காசு கொடுத்து பாருங்க,
  உங்களால லாபம் வரட்டும்.

  போஸ்டர் பாக்கற உனக்கே இவ்வளவு னா….

  மொதல்ல நான் சொன்னத செய்….
  அப்புறம் மேற்கொண்டு பேசுவோம்….
  உன்கிட்ட டைம் வேஸ்ட் பண்ணது போதும்.

  சொந்தமா எதுவும் எழுதாம அடுத்தவனை
  நொல்லை சொல்லி காலத்தை
  ஓட்டும் எங்கள் அண்ணன் பிளாக்கன் வாழ்க.

 10. அப்புறம் நீ ஓசியில தான் படம் பாப்பேன்னு
  உன் கமெண்ட் பார்த்த புரியுது, அப்புறம் இல்லன
  கருப்பு பணம் போல……
  எனக்கு தெரிஞ்சு நீ போஸ்டர் மட்டும் தான்
  பாப்பேன்னு நினைக்கிறேன்.
  இருங்கடி உங்கள மாதிரி நெறைய பேரு
  ஊருக்குள்ள சுத்திக்கிட்டு இருக்கானுங்க,
  ஒரு நாள் ஆப்பு இருக்குடியோவ் ,.

 11. அய்யா ஜெட்ட்ட்டுலீ………..

  புரியுது… ஜெட்லி… இன்னாடா படத்தைப் பாத்துபுட்டு அறிவு ஜீவி மாதிரி விமர்சனங்குற பேருல எழுதிகினு இருந்தவனை இப்படி தாளிச்சுப்புட்டுட்டானே… நம்ம கதி… அதோகதின்னும் ஊரேல்லாம் தெரிஞ்சுப்புட்டுதேன்னு… அந்த வயித்தெறிச்சல்ல பின்னூட்டமா கொட்டு கொட்டுனு கொட்டுறே.

  சரி இன்னா வேணுன்னாலும் சொல்லு. விவாதத்துக்கு பதில் சொல்லலாம். ஆனா வயித்தெறிச்சல் வார்த்தைகளுக்கு பதில் சொல்ல முடியாது.

  திரும்பவும் சொல்றேன், முறைப்படி சினிமா விமர்சனம் எழுதுறவங்க இந்தப் பதிவை கண்டுக்காதீங்க. கப்ஸா விமர்சனம் எழுதறவங்க குற்ற உணர்ச்சியில வயித்தெறிச்சல இங்க வந்து கொட்டிட்டுப் போகலாம். இல்லைன்னா, இனிமே படம் பாத்துட்டு, உங்களோட பார்வையில் இந்தப் படம் எப்படி இருக்குன்ற விஷயத்தை மட்டும் சொல்லுங்க. சினிமா விமர்சனம்னு தலைப்பு வைக்காதீங்க.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: