பிளாக்கன் எழுதியவை | ஜூன் 16, 2009

இருபது நாள் அனுபவமும் நான் கண்ட பதிவர் உலகமும்!

தோஸ்துங்களுக்கு வணக்கம்..  இன்னைக்கு பிளாக்கன் சீரியஸா எழுதப்போறாய்யா. யின்ன காரணமின்ன பிளாக்கன் பதிவர் உலகத்தில கால வச்சு இன்னையோட இருப………..து நாளாச்சிப்பா..

இருபது நாளு எம்படி இந்தீச்சின்னு உங்களுக்கும் தெரியனுமில்லாப்பா அதுக்காகத்தான் இந்த பதிவு. எல்ல பயலுகளும் வாழ்க்கையோட கடைசிக்காலத்துல குந்திக்கின்னு சுயசரிதை எழுதுவானுங்க. இல்லேன்ன, வேலைக்கு ஆளப்போட்டு, கத கதையா எழுதுவாங்க. அதில பதிதான் அவங்க வாழ்க்கையில நடந்திருக்கும்.

ஆனா பிளாக்கன் வித்தியாசமத்தான் செய்வான். அதனாலதேன், இந்த இருபது நாள் அனுபவத்தையே ஒரு சுயசரிதையா எழுதாலாமுன்னு இன்னைக்கு ஆரம்பிச்சிட்டேன். ஆனால், இது டெரர் பதிவு இல்லப்பா  டியர் பதிவு.  நீங்க எப்படி வேனுமின்னாலும் எடுத்துகப்பா. .

இந்த இருபது நாள் பயணத்தில,பிளாக்கனுக்கே சிலபயபுள்ளைக (பதிவர்கள்) பாடம் எடுத்துப்புட்டானுங்க. பிளாக்கனும் அப்படியே அந்த பாடத்தயெல்லம் மண்டையில ஒரு ஓரத்துல வச்சிட்டான்..  ஏன்ன வாழ்க்கையில அனுபவம் ரொம்ப பெருசுப்பா…. அதுதான் ஒரு மனுசன மனுசத்தன்மையோட இருக்க வைக்கும், வாழ்க்கையோட மீனிங்கையே புரிய வைக்கும்.

நீங்க நினைக்கலாம் இந்த முட்டாப் பயலுக்கு ஏக்கன்வே மூளை கம்மி இந்த லட்சனத்தில இருபது நாளில என்னத்த கிளிச்சிருப்பான்? அப்படீன்னு, (சும்மா மொக்கையா பதிவ போட்டு பதிவர்களோட சண்டை போட்டுக்கிட்டுத்தானய்ய இருந்தான் ).  பதிவு மொக்கை தான் அதை பிளாக்கன் ஒத்துக்கிறான். அதேநேரத்தில சக்கை கிடையாதுய்யா. அதை நீங்க மறுக்க முடியாதுய்யா.

பதிவில அம்புட்டுன் எழுத்துப்பிழை, ஃபஸ்ட் அதை சரி செஞ்சிட்டு வந்து எழுதிய்யான்னு பல பதிவர்கள் சொன்னானுங்க.  ஆலோசனை கொடுத்த அம்புட்டு ஞானிகளுக்கு  நன்றிய்யா. ஆனா நீங்க சொன்னத மாத்திக்க முடியாதுப்பா.. அதுக்கு காரணம் பிளாக்னோட ஸ்லாங்க் தான். ஏன்னா பிளாக்கன் படிக்காத கிராமத்துக்கார பயபுள்ள. அதனால படிப்பும் கம்மிதேன். யின்ன பன்னுறது இந்த இளவயெல்லாம் நீங்க ஏத்துக்கிட்டுத்தான் ஆகனும். இவன் கொள்கையோட.. (டெரர்.., டியர்..) வாழக்கூடியவன்.  கொள்கைய மட்டும் வுட்டுக்கொடுக்க மாட்டான். அந்த விசயத்துல மட்டும் அவன் மானஸ்தன்.

பிளாக்கனோட தளத்துக்கு வந்த பதிவர்கள் அம்புட்டுப்போருமே பின்னூட்டம் போட்டீங்க,  பலபேரு ஊக்கப்படுத்தினீங்க, சிலபேர் பிளாக்கனோட தவறை சுட்டிக்காட்டினீங்க..  பிளாக்கனும் சந்தோசப்பட்டன். நீங்க தொடர்ந்து பிளாக்கன் பதிவ படிச்சதும் உங்க மண்டையில யின்ன தோன்னுதே அத போடுங்கய்யா.. (நல்லதோ கொட்டதோ). மனசில தோன்றினத மறைக்கக்கூடாதுப்பா.

பிளாக்கனுக்கு பிடிச்சது இருக்கிற இடத்தில எப்பவுமே, நாம்மல சுத்தி நாலு பேரு இருக்கனும். அந்த நாலுபேருமே சிருச்சிக்கிட்டே இருக்கனும். நாம சிரிக்க வச்சுக்கிட்டே இருக்கனும். என்ன செய்யிறது பல பயபுள்ளைகள சிரிக்க வைக்கும்போது சிலரு பாதிக்கப்படுறாங்க…  இது ஃலைவ்பில சாகஜம் தானப்பா..

எந்த ஒரு விசயத்தையுமே நாம எப்படி எடுத்து அல்சிக்கிடுறமோ அந்த  விதத்திலதான் இருக்குது. தப்பு அப்படீன்னு நினைச்ச, தப்பு மாதிரியே இருக்கும், கரெக்ட்டி -ன்னு நினைச்ச கரெக்ட் மாதிரியே தெரியும். அதனால நாம எந்த ஒரு விசயத்தயும் நல்ல விதத்தில எடுத்துக்கிட்ட  அது நல்லதே இருக்கும் என்பது பிளாக்கனோட எண்ணம்.

பல பதிவர்கள் தோஸ்துங்களா கிடைச்சிருக்காங்க. பல நல்ல பதிவர்கள்  ஊக்கப்படுத்தினாங்க. பிளாக்கன் என்ன குறிக்கோளோட ஆரம்பிச்சானோ, அதையே ஏத்துக்கொண்டாங்க…. கவிதை வரிகளில பாராட்டினாங்க (பதிவுலகின் விடிவெள்ளி, புரட்டு பதிவுகளை புடுங்க வந்த புரட்சி புயல் பிளாக்கன் அவர்களுக்கு வணக்கம்.அடுத்தவன் மேட்டரை சுடாதவனுக்கு நீ நெம்புகோலாய் இருப்பாய்;சுடறவனுக்கு நீ சூட்டுக்கோலால் அடிப்பாய் )

என்ன பன்னுறது நல்லவே இருந்தா கெட்டவனும் இருப்பனுல்லா. ஒருசில அனானி பயலுக மட்டும் கொஞ்சம் டீசண்டா மீனிங்கில்லாம திட்டினானுங்க. பிளாக்கன் போய்ய எனக்கு வேண்ணா நீயே வச்சுக்கோன்னு பின்னூட்டன் அனுப்பிட்டான்.

பிளாக்கனோட அன்பான வேண்டுகோளுக்கு நம்ப டியரு தோஸ்து பதில் பின்னூட்டம் போட்டாரு, தம்பி நீயூ எதிர்பார்க்கிறா மாதிரி என்னோட பதிவுகள் கூடிய விரைவில புத்தகமா வருமின்னு. பிளாக்கனுக்கு பதில் போட்டதுக்கு நன்றி அய்யா..  

இந்த டுவண்டி நாளில பிளாக்கன் ஓரளவுக்கு பாப்புலர் ஆகியிருக்கான்னு தெரியுது. பதிவர்கள் பாதிபேருக்கு தெரிஞ்சிருக்கும். வேலையில்லாம பிளாக்கன்னு எவனோ ஒருத்தன் அலைஞ்சுக்கிட்டிருக்கான்னு. யின்ன பன்னுறது……
எல்லாரும் ஒரு வழியில போன பிளாக்கன் வேற வழியில போறான்.  “குப்பற படுத்த பசு மாடு, மல்லாக்க படுத்த சுடுகாடு ” ன்னு சும்மாவா சொல்லிருக்கானுங்க நம்ப தாடி மீச வெச்ச பெரிய மனுசங்க.


மறுவினைகள்

 1. நல்லா சொன்னிங்க டீட்டெய்லு..!

  உன் மொக்க தாங்கலடா யப்பா!
  முதல்ல நீ யாருக்காவது பின்னூட்டம்
  போடு! அப்புறம் கேளு பாஸூ…

  வர்டா பாஸ்!!

  • கலையரசன் சாரே………….

   மொக்கையை மொக்கையாக பார்த்தால் மொக்கையாகத் தான் தெரியும். அதை சக்கையில்லாமல் பார்த்தால் தான் அத்னுடையா சாரம் புரியும். அதை புரிந்து கொள்ளும் பக்குவம் தங்களுக்கு வரவில்லை என்று நினைக்கிறேன். நன்பரே……….. கொஞ்சம் டெவலப் ஆகுங்காஆஆ……..

 2. இருபது நாட்களுக்கு வாழ்த்துக்கள். இன்னும் நீண்ட பயணத்துக்குத் தயாராகுங்கள்.

  ஸ்ரீ….

  • ஸ்ரீ…. சாரே ………நன்றி

   பிளாக்கனுக்கு தாங்கள் தரும் ஆதரவுக்கு நன்றி…. பிளாக்கன் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டான்.. என்னுடைய பதிவுகளுக்கு தொடர்ந்து ஆதரவு தரவும்…………..

 3. BOSS.. DONT PUT MOKKAI

  • Benz சாரே………

   பிளாக்கனின் பதிவு மொக்கை தான் ஆனால் சக்கை கிடையாது என்று ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்… கருத்துக்களும், தாக்கங்களும் தாங்கியே வருவதாகவே நான் நினைக்கிறேன்.

   நன்றி
   பிளாக்கன்

 4. welcome to blogger’s world! Konjam over aa ponalum nallathan irukku! Nee nadathu Blackkaa!! Nadathu!!!

  • RJG Pal சாரே……

   உங்கள் வருகைக்கு நன்றி………

 5. 🙂


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: