பிளாக்கன் எழுதியவை | ஜூன் 12, 2009

சுட சுட கிழிந்ததென்ன.. தெரிஞ்சுக்கோ…. -டெரர்……..பதிவு!

ஏய்யா தெரிஞ்சுகோ (http://therinjikko.blogspot.com/2009/06/blog-post_11.html) … உன்னோட பேரே சரியில்லயே. என்ன பேரு வச்சிருக்கே.. பேருதான் சரியில்லேன்ன உன்னோட வேலையும் சரியில்லய்யா…  ஏய்யா பிளாக்கில, உன்னப்பத்தி ஒன்னுமே போடாம வச்சிருக்கே

சரி ,முதல்ல நீ என்னப்பத்தி தெரிஞ்சுக்கோ. என்னோடா பிளாக்கப் போய் படி நான் யாருன்னு தெரியும்.

ஏய்யா எதுக்கியா மத்தவனுங்க பதிவ திருடி போட்டிருக்கே.. உன்னோட பிளாக்கில உள்ள தகவல் அம்புட்டுமே. உன்னோட சிந்தனையில தோன்னினதில்ல.. மத்த பதிவர்களோட தளத்தில இருந்து சுட்டு போட்டிருக்கே.. உனக்கு இந்த மானங்கெட்ட பொழைப்பு தேவையா?. இதுக்கு நம்ப ஊரில வேற பேரு சொல்லுவானுங்க……………..

இதவிட நீயு பிளாக் எழுதாமலே போகலாம். உன்ன யாருய்ய எழுதுன்னு சொன்னது. பிளாக்குக்கு பேரே கரெக்ட்டா வைக்கத்தெரியாத உனக்கு மண்டையில சரக்கிருக்க வாய்ப்பே கிடையாதுய்யா.

மண்டையில சரக்கில்லாதவனே,  என்னோட தோஸ்து ஒருத்தரு 05-07-2009 அன்னைக்கு “ஜிமெயில் காலை வாரினால் கூட ஜிமெயிலை சுலபமாக படிக்கலாம்” ங்கிற நேமில ஒரு தரமான பதிவ போட்டு தமிழிஷ் திரட்டியில 27 ஓட்டு வாங்கியிருக்காரு.

இத நீயு பார்த்துப்பூட்டு.  இது நல்ல பதிவுய்யா இந்த பதிவ சுட்டு தெரிஞ்சுகோ பிளாக்கில போட்டா , நாலு பேரு வந்து பார்ப்பானுங்கனு நினைச்சு அத அப்படியே  சுட்டு 11-06-2009 ம் தேதி உன்னோட பிளாக்கில போட்டிருக்கே.. சரி சுட்டதுக்கு ஒரு நன்றினுகூட அந்த தோஸ்து போர நீயு போடல..

இந்த மானங்கெட்ட பொழைப்பு தேவையா?

பிளாக் எழுதுற இடத்துல SWINE FLU -க்கு என்னய்யா வேலை?

போய் உன்னோட பொழைப்ப பாருய்யா?

உன்னமாதிri ஆளுங்க பிளாக் எழுத வந்ததிலயுருந்து தான் நல்ல பதிவர்கள் எல்லாம் எழுதறதேயே நிறுத்துறானுங்க..

மத்தவனுங்க பணத்தத் திருடறதுக்கும், அவங்க உழைப்ப (பதிவு) திருடுறதும் ஒன்னுதே. பிளாக்கன் சட்டத்தில ஒரே தண்டனை தாய்யா. அதுதான் டெரர். பதிவு.

ஏய்ய உனக்கு சிந்திக்கிற தன்மை கிடையாது. நான் ஏத்துகிடுறேன். மூளையின்னு சொன்னா உன்ன மாதிri ஆளுங்க எந்த்க்கடையில கிடைக்குமின்னு சொல்லுங்க சுட்டுக்கிட்டு வந்து சாப்பிடுறேன்னு சொல்லுவாகய்யா.

ஏய் நீயு செஞ்சது தப்புத்தேன் இனி சுட மாட்டேன்னு நீயு சுட்ட அத்தனை பேருக்கிட்டயும் பகிரங்கமா மன்னிப்பு கேக்கனும். இல்ல கேக்க முடியாதுன்ன. அதுக்கப்புறம் பிளாக்கன் அவனோட வேலையில இறங்கிடுவான்.

கடைசியா நான் ஒரு அட்வைஸ் சொல்லுறேன், மறக்காம பாலோவ் பன்னு.. நீயு வாழ்கையில ரொம்ப பெரிய ஆள வருவாய்யா…. யின்னன்னா?  நீயு நல்ல சுடுறாய்யா….. அதனாலா எனக்கு தெரிஞ்ச நம்ப முனியாண்டி விலாசில இட்லி சுடுற வேலை இருக்கிய்யா. உன்ன நானு ரெகமெண்ட் பன்னி சேர்த்து வுடுறேன்.

நீயு இட்லி சுட்டு வாழ்க்கையில பெரிய ஆளா வாப்பா………

பிளாக்’கன்’ எச்சரிக்கை: ஏய்யா இது தெரிஞ்சுக்கோக்கு மட்டுமில்ல சுடுறவனுங்க எல்லாருக்கும் தான்.


மறுவினைகள்

 1. உங்கள் பதிவு Tamilish ல் சரியாக இணைக்கப்படவில்லை. சரி செய்யவும். மற்றொரு ”நச்” பதிவு.

  ஸ்ரீ…..

  • ஸ்ரீ…. சாரே………நன்றி சாரே……..

   தமிழிஷில் சரி செய்யப்பட்டுள்ளது சாரே…….

   உங்கள் ஆலோசனைக்கு நன்றி…………….

 2. ஹய்யோ.. ஹய்யோ…
  உங்கள பார்த்தா எனக்கு,
  சிரிப்பு, சிரிப்பா வருது!!

  • கலையரசன் சாரே…………..

   அய்யோ……….அய்யோ………

   உங்கள பர்த்தாலும் வாய் நிறைய சிப்பு வருது சரே………..

   உங்கள் வருகைக்கு நன்றி………..

 3. ///சுடச் சுடக் கிழிந்ததென்ன?///

  வேற என்ன அந்த “தெரிஞ்சுக்கோ” ப்ளாகரோட டவுசர் தான்…

  • vijaygopalswami சாரே……….

   உங்கள் வருகைக்கு நன்றி……………

 4. //என்னோட தோஸ்து ஒருத்தரு 05-07-2009 //

  //அத அப்படியே சுட்டு 11-06-2009 ம் தேதி //

  தேதி சரியா என பாருங்கள்., இடிக்கிதே

  • அறிவே தெய்வம் சாரே……..

   உங்கள் வருகைக்கு நன்றி……..
   05-06-09 என்ற தேதி தவறுதலாக 05-07-09 என்று போட்டுள்ளேன்.
   தவறை சுட்டிக் காட்டியதுக்கு நன்றி…………..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: