பிளாக்கன் எழுதியவை | ஜூன் 1, 2009

அனானிங்குற சோனகிரிங்களுக்கு… ‘டெரரு………’!

anani1நம்ம பதிவு தமிழிஷ் போன்ற திரட்டிகளில் அதிக வாக்குல  பாப்புலர் ஆகும்போதும், தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் சூடா வலம் வரும் போதும் அடையும் அதே மகிழ்ச்சி… நமப பதிவில எவரேனும் பின்னூட்டம் இட்டால் கிடைக்கும் அல்லவா?

பின்னூட்டம் இருந்தால் தான் ஒரு பதிவு நல்லப் பதிவு என்பது இல்லை. ஒரு பின்னூட்டம் இல்லாத பல பதிவுகள் சிறந்த பதிவுகளாக வலம் வருது. அந்த பதிவுகளில ஏன்?  பின்னூட்டம் இல்லை என்றால், அந்தப் பதிவில் சொல்லப்பட்ட விஷயங்கள் அனைத்துமே விவாதத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. எல்லா கோணங்களிலும் அந்தப் பதிவர் அலசி விட்டார் என்பதே பொருள். என்ன… அவருக்கு நல்ல தொடர்பு இல்லாததால்… அவர்களைப் போன்றவர்களுக்கு ‘மீ தி பர்ஸ்டு’, ‘மீ தி டென்த்’, கலக்கிட்டீங்க, பின்னீட்டிங்க போன்ற பின்னூட்டங்கள் இருப்பதில்லை.

சரி இதை வுடுங்க…

இப்ப மேட்டரு யின்னனா..? பேரே இல்லாதவனுங்க சில பேரு  அலையாறானுங்க. அவனுங்களுக்கு பேரு “அனானிமஸு”. இந்த பேரில்லாதவனுங்க (அனானிமஸு) பத்திதான்..!

ப்ளாக்கனுக்கு பிடிச்சதெல்லாம்  இரண்டு தேன். அது யின்னேன்னா ஒண்ணு ‘டியரு’. இன்னொன்னு ‘டெரரு’.

யாரோடை பதிவு புச்சிருக்கிதோ. அத பாராட்டி  எழுதிபூடுவான் இந்த பிளாக்கன்.அதுக்கு பேரு ‘டியரு’… எவனையாவது ஓடவுட்டான்னு வைச்சிக்குவோம் அதுக்குப் பேரு ‘டெரரு’.

இப்போ அனானிங்களால மாறி இருக்குற அவதாரம் டெரர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரு…!

ஒரு பதிவை படிச்சுப்பூட்டு , அந்தப் பதிவை திட்டி விமர்சிச்சுப் போடுறதுக்கு அனானி அவதாரம் எடுக்குறாங்க இந்தச் சோனகிரிங்க

அப்படி யின்னங்கடா உங்களுக்கு பயம்?

 ஒரு பதிவை நியாயமான முறையில விமர்சிக்கிறதா இருந்தா உங்கப் பேர போடுங்கடா Hair புடுங்கிங்களா? அதைவுட்டுப் புட்டு கொலைநடுங்கி பசங்கப் போல அனானியா வராதீங்கட. அவனுங்களுக்கு பிளாக் கூட இருக்கிதான்கிறது டவுட்டு தேன்.

இதுல வேற புதுப் புது ட்ரென்டுங்கள அவுத்துவுடுறானுங்க இந்த நேம்மில்லாதவனுங்க…

டூப்ளிகெட்டு மெயில் ஐ.டி.ல வந்து இந்த சோனகிரி அனானியா பின்னூட்டம் போடுறனுக. இதுல கூத்து யின்னன்னா? நம்ம பிளாக் பேருலயே போடுறது. உதாரணமாக நம்ம ப்ளாக்கையே எடுத்துக்குவமே… பிளாக்கன்ன முள்ளம்மாரித்தனத்தோட திட்டுகிற பன்னுத்துன்னுற பன்பாடுங்க bloggun – bloggun@bloggun.com-ன்ற உலகத்துலயே உதாவக்கரையான மெயில் ஐ.டி. பயன்படுத்தாறானுங்க..

இந்த மாதிரி புன்னாக்குப் பசங்கள என்னத்தே சொல்றது?

ஆனா ஒண்ணு மட்டும் தெரியுதுல. நம்ம கூட ஜாலியா பிரண்டு மாதிரி இந்துகிட்டு, நம்ம வலைப்பதிவ பாலோ பண்றோம்னு நம்ம பதிவுல போட்டோ கூட மாட்டிக்கிணு இருக்குற சிலரு கூட அனானிங்களா அனியாயம் பண்றானுங்க.

இந்த மாதிரி ஈனங்கட்ட பசங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கிட்டே இருக்குல்ல. நம்ம பதிவுல நண்பன்னு சொல்லிக்கிட்டு, ‘அற்புதம். அபாராம், ஒத்துக்குறேன்’ இப்படியெல்லாம் சொல்லிகினு ஒரு பின்னூட்டம் வந்து இருக்கும். அது வந்து அடுத்த அஞ்சு நிமிஷத்துல, அந்த பின்னூட்டம் கீழயே அனானி அவதாரம் எடுத்து அந்த நண்பனு போடுவாரு பாருங்க ஒரு பின்னூட்டம்… நீ புடுங்கறுது எல்லாமே நல்லா இல்லாத ஆணிதாங்குற ரேஞ்சுல இருக்கும்? உஷாரய்யா? உஷாரு!

நம்ம பயபுள்ளிங்க எவ்ளோ நல்ல புள்ளீங்க தெரியுமால அனானி சனிப்பசங்களா?

அனானியா வந்து திட்டி பின்னூட்டம் போட்டாக்கூட, அதை மதிச்சு தவறாம நம்ம பயபுள்ளீங்க பதில் பின்னூட்டம் போடுறானுங்க அப்ப கூட புத்திக்கு ஒறைக்கிலாயா?

சரி… ஒரு பதிவு சரியில்லன்னா யின்ன பண்ணனும், நண்பனா வந்து திட்டலாம்,  நாங்க திருத்திக்றோம். இல்லேன்னா… யேவ்.. இது சரியில்லேன்னு நண்பனா கருத்து மோதல்ல ஈடுபடுங்க…. அதை வுட்டு பூட்டு கொலநடுங்கி பயபுள்ளிங்களா வராதீங்கட……

ஒரு சில அனானிங்க இருக்காங்க. அவங்களோட கேள்வியும் சந்தேகமும் நியாயமாத்தே இருக்கும். அதுல ஒரு நேர்மையும் இருக்கும். ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால போடாம இருப்பாங்க. அப்படி நேர்மையா இருக்குற சில அனானிகளுக்கு இந்த ப்ளாக்கன் எப்பவுமே டியரு தாங்க.

ஆனால், ஃபிராடுத்தனமா வீம்புக்குன்னே வர சோனகிரி அனானிகளுக்கு தான்ல பிளாக்கன் டெரர்ர்ர்ரூ…

எனக்கு தெரியும்ல… இந்த பதிவுக்கு நீங்க அனானியா வந்து ஈங்கிலீசு காரணுங்க கிட்ட இருந்து கத்துகிட்ட நல்ல வார்த்தைகளை போடுவீங்கடா.

ஆனால், எங்களுக்கும் டெலிட்டு ஆப்ஷனு இருக்குல்ல… உள்ள விட மாட்டோமுடா சோனகிரி பசங்கலா..

பின்னால நொட்ஸு: ஏய்யா இம்புட்டு நியாயம் பேசுறியே, ப்ளாக்கன்றவன் யாரு? தைரியம் இருந்தா உன்னோட முகத்தை காட்டுடான்னு உங்கள்ல சிலரு கேட்கலாம். ஆனால், நம்ம பதிவுலகத்துல பல தோஸ்துங்க  ‘வேணாம்… நீங்க ஒரு அந்நியனாகவே இருந்து அநியாயத்தை பொசுக்குங்க’ன்னு சொல்லியிருக்காங்க. அவுங்க பேச்சைக் கேட்டு, நம்ம ப்ளாக்கன் பதிவுலகத்துல அந்நியனா தான் எப்பவும் இருப்பான்!. அநியாயத்தை சும்மா விடமாட்டன்.


மறுவினைகள்

  1. சபாசு !

    • ஜுர்கன் க்ருகர் சாரே…… நன்றி……

  2. Hi.. s u p e r

    // ஆனால், எங்களுக்கும் டெலிட்டு ஆப்ஷனு இருக்குல்ல

  3. ஆனானியா வந்து யாரும் சூப்பர் பதிவுன்னு சொல்ல மாட்ரானுங்க.. ஏன் கன்?
    நீங்களாவது என் ஆசையை நிறைவேத்துவீங்களா?

    இப்படிக்கு,
    டெரருக்கு அச்சாத ஃபயரு!

  4. சூப்பர் தலைவா.. உங்க தைரியம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.

    அண்ணா நானெல்லாம் வாழ்க்கைல அனானி கமெண்ட் போட்டதே இல்லீங்க்ணா.. மைண்ட்ல வச்சிக்கோங்க.. யார்னா எதுனா தப்பா சொல்லி வச்சி என்கிட்டயும் டெர்ரர் ஆய்டாதிங்க.. 😦

  5. வலையுலக புருஷோத்தமா வாழ்க……….வளர்க…….

  6. பிளாக்”கன்”,

    தொடர்ந்து நல்லா எழுதுறீங்க. அங்கங்கு எழுத்துப்பிழை. சரி செய்யவும். இன்னும் உங்களைப் பத்தி சொல்ல மாட்டேங்கிறீங்க. மொத்தப் பதிவர்களும், சில அனானிகளும் சேர்ந்து நீங்க யாருன்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்காங். விரைவில் முடிவுகள் வரும்.

    ஸ்ரீ….

  7. tamilnenjam, கலையரசன் , சஞ்சய் , வசந்த் , ஸ்ரீ…. அம்புட்டு சாருங்களுக்கும் நன்றீங்கோ…….

  8. poonaikku mani kattiyachi…..

  9. //ஒரு பதிவை படிச்சுப்பூட்டு , அந்தப் பதிவை திட்டி விமர்சிச்சுப் போடுறதுக்கு அனானி அவதாரம் எடுக்குறாங்க இந்தச் சோனகிரிங்க

    இதை ஒரு அனானியா சொல்றது கொஞ்சம் அநியாயமா இருக்குது

    • குந்தவை சாரே / மேடம்……………..

      பிளாக்’கன்’ அந்நியனே தவிர அனானி கிடையாதுங்கோ……….

      நம்ப தோஸ்துங்க கேட்டுக்கிட்டதனால தான் பிளாக்கன் அந்நியனா இருக்கான்.

      புரிஞ்சுக்கோங்கோ………..

  10. மயிருண்ணே போட்டிருக்கலாம்.

    • /மயிருண்ணே போட்டிருக்கலாம்/

      pukalini மேடம்………

      பிளாக்கன் எப்பவுமே தவறான வார்த்தைகளை பயன்படுத்த மட்டான். எழுதுவதற்கு ஒரு வரைமுறை இருக்கிறது. அதை தாண்டி பிளாக்கன் செல்ல மாட்டான்….


ஜுர்கன் க்ருகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

பிரிவுகள்