பிளாக்கன் எழுதியவை | மே 30, 2009

கம்பர்ட்டு டாட்டு இன்போ..! – காப்பி பேஸ்ட் நிறுத்திய்யா- பிளாக்’கன்’ எச்சரிக்கை!

பரவால்ல இன்னிக்கு சூப்பர்… ரெஸ்பான்ஸு. தமிழிஷ்ல 17 ஓட்டுப்பா. தூள் கிளப்பீட்டீங்கப்பா. ஓட்டுப்போட்டு, கமெண்ட் போட்டு ஆதரவு தந்த அம்புட்டு தோஸ்துங்கலுக்கும் நன்றீங்க…  சில நன்பர்கள் சொன்னாங்க, காரத்தக் குறச்சுக்கனு, எப்படி குறைச்சுக்க முடியும் இது பிளக்’கன்’ ஓட கடமை பாருங்க. யாரும் கடமையில தவறினவன்னு சொல்லக்குடாதுல்ல… இருந்தாலும் ட்ரை பன்னிக்கிறேன்.

இன்னைக்கு (30-05-2009) கம்பியூடர் முன்னாடி குந்திக்கினு இருந்தேன். திடீரின்னு நம்ப பிளாக் தோஸ்து  ஒருத்தரு பிளாக்கில உள்ளத எவனோ சுட்டுக்கின்னானு தமிழிஷ்ல தகவல் குடுத்தாரு . கம்மினு கிடந்த பிளக்’கன்’ னுக்கு வேலை வந்ததும் களத்துல குதிச்சுட்டான்.

யாரு சுட்டுக்கினது,

blog30052009யாருன்ன “கம்பர்ட்டு டாட்டு இன்போ..! ” (http://www.comfocus.info/wp/?p=581).(Bluetooth)

ஏய்யா…  கம்பர்ட்டு டாட்டு இன்போ..! இது உனக்கு தேவையாய்யா…. ஏற்கனவே நான் சொல்லி இருக்கேன். மறுபடியும் உன்னோட வேலையை காட்டுறா பார்த்தியாய்ய…. கஷ்டப்பட்டு பிளாக்கில போட்டா, நீயூஸ சுட்டு உன்னோட தளத்துள போட்டுட்ட. கீழ ஓரத்துல தாங்ஸ்னு போட்டுருக்க.

பி.டி.ஐ., யுஎன்ஐன்னு  நிறுவனமா நடத்துறானுங்க. மண்டையில தோன்னுறத தானய்ய பதியிறானுங்க. ஒன்னோட மண்டையில சரக்கு இல்லேன்னா. அடுத்தவனோடத ஏய்யா திருடா.

முதல் தடவ எங்கிறதால வார்னிங் கமெண்ட் தமிழிஷ்ல போட்டேன். ஊங்கிட்ட இருந்து ரெஸ்பான்சு வரல்ல . அப்போ எப்படி பிளாக்’கன்’ கம்மினு இருப்பான்.அதான் ஆரம்பிச்சுட்டான்.

ஏய்யா நீயு கோட்டு சூட்டு போட்டு வெள்ளக்கார துரை போல டீசண்டா வந்த  பிளாக்கனும் உன்னப் போலயே வந்து ஏசி அறையில உக்காந்து பேசுவான். இல்லன கோவணத்தக் கட்டிக்கினு நடுரோட்டுக்கே வந்துடுவான். தட்டிக் கேக்குறத்துக்கு.

அதனால இன்னையோட இந்த பொலைப்ப வுட்டுட்டு, நல்லதோ, கெட்டதோ உன் மண்டையில தொன்னுறத எழுது… இல்லையினு பிளாக்க்னோட போட்டி போட ஆரம்பிச்ச்ச்ன்ன  அம்புட்டுத்தான்.

கம்பர்ட்டு டாட்டு இன்போ…  தகவலச் சுட்டதக்கு பிளாக்கன் உன்னோட பிளாக் எழுத உரிமையையே ரத்து பன்னனும். பஸ்ட் டைம்மு எங்கிறதால மன்னிப்புக் குடுக்கிறான் இந்த பிளாக்கன்.

எல்லாருக்கும் நான் ஒண்ணு சொல்லிக்கிறேன். உங்களோட சொந்த படைப்புகளை மட்டும் பயன்படுத்டுங்க. அத வுட்டுப்பூட்டு  காப்பி, பேஸ்ட்டின்னு போனா பிளாக்கன் டெண்சன் ஆகிடுவான். ஆமா சொல்லிப்புட்டேன்…


Responses

 1. ஏங்க அதில இருக்கிற பல பதிவுகள் சுட்டுதான் போட்டிருக்கு!

  • tamil2000 சாரே நன்றி…

   பிளாக்’கன்’ ஆரம்பிச்சிட்டான்ல…

   போகப் போகப் பாருங்க….. ப்ட்டைய கிளப்புவான்

 2. தலைவா! என்னதிது, இப்படி போட்டு வறுத்து எடுத்திட்டிங்க! ஏதோ, ஒரு ஆர்வத்துல செய்திருப்பாங்க,
  அதுக்காக,
  இப்படி வார்த்தையால
  குத்தாதிங்க எசமான்
  குத்தாதிங்க

  • சூர்யா கண்ணன் சாரே …

   பிளாக்’கன்’ ஓட வேலையே இதுதான்…..

   பிளாக்’கன் கோபக்க்காரனுங்கோ…..

 3. உங்க வலைப்பக்கத்தை திறக்கையில் Kasperksky செக்யூரிட்டி வார்னிங் தொடர்ந்து வருகிறது, என்னன்னு பாருங்க!

  • சூர்யா கண்ணன் சாரே….

   பிளாக்’கன்’ பதிவர்களுக்கு செக்யூரிட்டி……..

   அவனுக்கெ செக்யூரிட்டியா…….

 4. அடுத்த பதிவிற்க்காக காத்திருக்கிறேன்!

  டைம் இருந்தா அப்படியே நம்ம பக்கங்களுக்கும் வாங்க..
  உங்க கருத்தை சொல்லிட்டு போங்க…

  • கலையரசன் சாரே…..

   தங்களுடைய அழைப்புக்கு நன்றி….

   ஃப்ரியா இருக்கும் போது கண்டிப்பா வருவான்….

 5. உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

  பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

  • tamilini சாரு……..

   தங்களுடைய தகவலுக்கு பிளாக்’கன்’ கும்பிட்டுக்கினு தாங்க்ஸ் சொல்றான்..

   நன்றிங்கோ……………………………

 6. அருமையான பதிவு தலைவரே. உங்கள மாதிரி ஒருத்தர் தான் ப்ளாகுக்கு அவசியம். வாழ்த்துகள்.

  • சஞ்சய் சார் நன்றி……………………

   உங்களுடைய ஆதரவு பிளாக்கனுக்கு தேவைங்கோ…………………

 7. அண்ணே.. வேர்ட்ப்ரஸ் இருக்கட்டும்.

  blogger ல ஒன்னு ஆரம்பிங்க..

  இதில் ஒவ்வொரு முறையும் மறு மொழி அளிப்பதற்குள்,, எல்லாத்தையும் எண்டர் செய்ய வேண்டி இருக்கு. அதாங்

  • தமிழ்நெஞ்சம் சாரே…….

   பிளாக்’கன்’ ரெம்ப… பிசி…………

   கூடிய விரைவில blogger ல வருவானுங்கோ…………

   நன்றி சாருங்கோ……………………..

 8. “பிளாக் உலகை சீர்திருத்த வந்த தீவிரவாதி“.இது தான் என்னோட மீனிங். //கேனத்தனமா எழுதறவனுங்கள மானங்கெட்டு ரோசம் வந்து ஓட வைக்குறது தாங்க என்னோட வேல. அதனால கொஞ்சம் யோசிச்சு எழுதுங்க. ஏன்னா கையில துப்பாக்கியோட கிளம்பிட்டான் பிளாக்‘கன்‘.//
  அடுத்தவங்க விசயத்துல தலையிட நீங்க யாரு? உங்களுக்கு அந்த உரிமையை கொடுத்த்து யார்?

  • போக்குவரத்து Rules மதிக்காதவங்க விசயத்துல தலையிடுறதுக்கு Traffic Police என்ன இருக்குதோ………

   தப்பு பண்ணுறவங்க விசயத்துல தலையிட போலிஸுக்கு என்ன இக்குதோ ……

   அதே உரிமை பிளாக் பதிவர்கள் விசயத்துல தலையிட பிளாக்கனுக்கு இருக்குதுங்கோ………….சாரே……..

 9. இந்த பிளாக்கைப் பத்தி நண்பர் ஒருத்தரும் சொன்னாரு. நண்பரோட பிளாக்லேர்ந்து நிறைய காப்பி பண்ணிட்டாங்க. அவங்களுக்கு சூடு வச்சதற்கு நன்றி.

  ஸ்ரீ….

  • ஸ்ரீ சாரே நன்றி………………

 10. மொதோ போணி …..

  ம்ம் ..ம்ம் …நல்லாத்தான் சூடு வைக்கிற!

  பகிரப்பட்ட தகவல் பொது விஷயம். யார் வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பகிரலாம். மைக்ரோ சாப்ட் இன் சிந்தனையில் உருவான விசயமே அன்றி முதலில் பதிந்தவரின் உருவாக்கம் அல்ல.

  ப்லோக் கன் : பொது விசயங்களை பகிர்வதும், சுடுவதும் தவறில்லை, இன்னொருவரின் சுய சிந்தனையை திருடுவதுதான் தவறு. சுடப்படும் விடயங்களின் தன்மையை பொருத்து நீர் சூடு வைப்பதிலிருந்து விதி விலக்களிக்கலாம்.

  • Juergen சாரு நன்றி…..

   //பொது விசயங்களை பகிர்வதும், சுடுவதும் தவறில்லை, இன்னொருவரின் சுய சிந்தனையை திருடுவதுதான் தவறு. சுடப்படும் விடயங்களின் தன்மையை பொருத்து நீர் சூடு வைப்பதிலிருந்து விதி விலக்களிக்கலாம்.//

   சாரு நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்… இனி வரும் பதிவுகளில் தங்களின் ஆலோசனையை பின்பற்றுகிறேன். உங்களுடைய ஆலோசனைக்கு நன்றி சாரு……

 11. என் ஆதரவு எப்போதும் உண்டு ப்ளாகன். நீங்கள் தான் வலையுலக அந்நியன். என்னைப் போன்றவர்களுக்கு எதாவது பிரச்சனை என்றாலும் உதவி செய்வீர்களா? சிலர் மிரட்டி , திட்டி பின்னூட்டம் போடுகிறார்கள். மெயில் அனுப்புகிறார்கள். 😦

  • சஞ்சய் சாரே…….

   என்னோட வேலையே பிளாக் உலகை சீர்திருத்துறது தான்……

   யாரு கூப்பிட்டாலும் முதல் ஆளா வந்திடுவேன்………………

 12. விடுப்பா,,


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: