பிளாக்கன் எழுதியவை | மே 29, 2009

Ctrl+C, Ctrl+V-யை தூக்குங்கப்பா..!

ரொம்ப வருஷமா  ப்ளாக்குங்கள படிச்சு வந்தேன்.சரி நாமளும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாமுன்னு லட்சியத்தோட இதை தொடங்குனே. பராவால்ல ஓரளவு ரெஸ்பான்ஸு இருக்கு. ஆனால், ஒரு ஆறு ஏழு ஓட்டுதான் தமிழிஷ்ல விழுந்துருக்கு, நம்ப ஊரு தேர்தல் மாதிரி ஆயிடிச்சு. ஓட்டு போட துட்டு கேப்பானுங்க போல இக்குது.

ஓட்டுப் போட்ட, கமெண்ட் போட்ட நல்லவனுங்களுக்கு மட்டும் நன்றி.

ஏம்பா… ப்ளாக்’கன்’ புதுசா ப்ளாக்லோகத்துக்கு வந்திருக்கான். மொக்கையோ, கிக்கையோ ஓட்டோப்போட்டு  பாபுலராக்கனுமில்ல ,ஊக்கப்படுத்தனுமில்ல, பன்னல  இது நியாயமா? அப்புறம் எப்படி பிளாக்கன் கம்மினு இருப்பான். அதுதே  இன்னைக்கே ஸ்டார்ட் பன்னிட்டான்………………

ப்ளாக்னா என்னென்ன தெரியாம பல பேரு சுத்திட்டு திரியிறானுவ.  உங்களோட எண்ணத்தை, நினைப்பை, விருப்பத்தை, திறமையை, எழுத்து ஆற்றலை, இலக்கியத்தை, உங்க துறை சார்ந்த தகவலை இப்படி உங்க மனம் சார்ந்த சமாச்சாரத்தை பகிர்ந்துகிறதுதான் ப்ளாக்குன்னு நெனைக்கிறேன்.

சில பயபுள்ள இருக்காணுவ.

அவனுகளுக்கு தெரிஞ்சது எல்லாம் Ctrl+C, Ctrl+V மட்டுந்தேன்.

சுட்டுப் போடுறது ஒரு ரகம்.

இன்னொரு ரகம் இருக்கானுக…

காலையில எழுந்து கம்பியூடர் முன்னாடி குந்திக்கினு  தினந்தந்தி, தினமணி, தினகரன்… மாலை மலர், மாலைச்சுடர் இப்படி பட்ட சைட்டுகளுக்கு போய், விவகாரமான நியூசை காப்பி பேஸ்ட் பண்ணி ப்ளாக் போடுறானுங்க.

அப்பப்ப ப்ரேக்கிங் நியூஸும் வெப்துனியா, மாலைமலர், தினமலர் இப்படி பல சைட்ல இருந்து சுட்டு அப்படியே கொட்டுறானுங்க.

வாரமானால் விகடன், குமுதம் மாதிரி பத்திரிகையில இருந்து எடுத்து போடுறானுங்க.

பல பேரு நன்றி: சுட்ட இடம்’னு கூட போடுறது இல்லை. அப்படி ஒரு சிலரு போட்டாலும், அது இக்குற இடமே தெரிய மாட்டேங்குது. எங்கேயாவது கண்ணுக்கு தெரியாத இடத்துல போடுறானுவ..

யோவ்… நியூஸ கொடுக்கதான் பல பேரு புரொபஷனால இருக்கானேய்யா… உனக்கு என்னய்யா வேலை?

அவனவன் பி.டி.ஐ., யுஎன்ஐன்னு சப்சுகிருப்ஷனுக்கு மாசம் ஆயிரக்கணுக்கு கட்டிட்டு, சம்பளத்துக்கு சப் எடிட்டரு வெச்சு நியூஸ் அடிச்சுட்டுப் போடுறானுக, அத நோகாம  Ctrl+C, Ctrl+V போட்டுட்டு, அதையும் அக்ரகேட்டர்ல போட்டுட்டு ஹிட்டு வாங்குறது, கூடவே கூகுல் ஆட் இருந்தா துட்டு வாங்குறது. இதெல்லாம் பொழைப்பாய்யா?

இவனுங்க நோகாம நொங்கி சாப்பிடுறானுங்க.. அதுக்கு ஆதராவா ஒரு கோஸ்டி ஓட்டு போட்டு என்கரேஜ் பன்னுறானுங்க..

சரி நியூஸ் பத்தி எழுத விரும்புறீங்… நல்லது…

ப்ளாக்ல நியூஸை காப்பி பேஸ்ட் பண்ணாம, அந்த நியூஸ பத்தின உங்க மண்டைல யின்ன தோனுது  (Views) எழுதலாமில்ல?

இன்னிக்குக்கூட தளபதி துணை முதல்வராயிட்டாரு நியூச பாதி பயலுக ஒரே  நியூஸை துண்டு துண்ட  உடைச்சு போட்டிருக்கானுக.

அதுக்கு பதிலா  நாலு நிமிஷம் குந்திக்கின்னு  மண்டைக்கு கொஞ்சம் வேலையக் குடுத்து  யோசிச்சு  பதவிக்கு அவரு தகுதியானவரா? ன்னு  அலசி, உங்க கருத்த எழுதுங்க… அப்படி பண்ணினா இந்த பிளாக்கன் ஏன் கேட்கப்போறான். கம்மினு உங்களுக்கு ஓட்டப் போட்டுப்புட்டு , குப்புற அடிச்சுப் படுத்துடுவான் பாருங்க.

சோ… இனிமேலாவது  Ctrl+C, Ctrl+V போடாமா, உங்க கருத்துகளை பதிவு பண்ணுங்க. அதைத் தான் எல்லாரும் எதிர் பார்க்கிறானுங்க..

என்னடா நேத்து வந்த இவன் இம்புட்டு ஓவரா பேசுறான் யின்ன நினைக்கிறீங்களா?

நினைச்சுக்குங்க… அதுக்கு யின்ன இப்போ?

ஒன்னு மாத்துரம் சொல்லிக்கிறேன்… இந்த ப்ளாக்கன் சைலண்டா தான்  சொல்றதை சொல்லுவான். நீங்க கேட்ட்டுக்கினீங்கனா பிளாக்’கன்  பிளாக்(BLOG)கா இருப்பான் இல்லேனா கன் (GUN) னா மாறிடுவான் அம்புட்டுத்தான் நான் சொல்லுவேன்)

பிளாக்’கன்’ எல்லாம் ஒன்னும் உடம்பு பூர சரக்கு வச்சிருக்கிற  அறிவு ஜீவி கிடையாது. ஏதோ பல வருஷம்  உங்கள எல்லாம் ரொம்ப நாளா படிச்சு ரசிச்சவன்ற குவாலிபிகேஷன் மட்டும் தான் இருக்கு.

என் கருத்துகுத்தை நினைச்சு கோபபடுறீங்களா.. படுங்க..

கண்டுக்க மாட்டீங்களா… கண்டுக்காதீங்க… ஆனால் பிளாக்கன் கோபத்துக்கு ஆளாகாதீங்க

ஆனா ஒண்ணு மட்டும் நூறு தபா சொல்லிக்கிறேன்… ப்ளாக் எழுதறதை மட்டும் நிறுத்தாதீங்க… என்ன மாதிரி தமிழ் மேல சைக்கிள், மோட்டார் பைக், கார், லாரி, புல்டோசரு, ரயிலு எல்லாம் ஏத்தாமா நல்ல தமிழ்ல எழுதுங்கப்பா!

மறுப்படியும் ஒரு தபா சொல்லுதேன்… Ctrl+C, Ctrl+V-யை தூக்குங்கய்யா.. குந்திக்கினே ஓசியில அல்வா சாப்பிட நினைக்காதய்யா…


மறுவினைகள்

 1. நீங்க இன்னும் நம்ம பிளாக்கைப் படிக்கவேயில்லையா? இந்தப் பதிவும் நல்லா இருக்கு.

  ஸ்ரீ….

 2. ela raththam suuda irukku konjam vittu pitippom

 3. ஸ்ரீ சாரு நன்றி

  பிளாக்கன் உங்கே தளத்த பார்த்தான்.சூப்பார இருக்கு…………

  ——————————
  karthik சாரு

  உங்கள் வருகைக்கு நன்றி

 4. பதிவுலகின் விடிவெள்ளி, புரட்டு பதிவுகளை புடுங்க வந்த புரட்சி புயல் பிளாக்கன் அவர்களுக்கு வணக்கம்.

  அடுத்தவன் மேட்டரை

  சுடாதவனுக்கு நீ நெம்புகோலாய் இருப்பாய்;
  சுடறவனுக்கு நீ சூட்டுக்கோலால் அடிப்பாய் ;

 5. Surrender………

 6. Juergen சாரு நன்றி….

  இப்ப தான பிளாக்’கன்’ ஆரம்பிச்சிருக்கான்… போகப் போக பாருங்க பட்டைய கிளப்புவான்…

 7. உருப்புடாதது_அணிமா சாரு….

  ஏத்துக்கிட்டதனால பிளாக்’கன்’ நன்றியத் தெரிவிச்சுக்கிறான்

 8. நல்லா கெளப்புறாய்ங்கய்யா பீதிய..,

 9. சூர்யா கண்ணன் சாரு நன்றி …….

  வெயிட் பன்னி பாருங்க பிளாக்னோட லீலைய…..

 10. காமீடி கீமிடி பண்ணுலயே..!

 11. குளோபன் சாரே நன்றி…….

 12. கலக்கிட்டீங்க.

  பல ஆண்டுகளாக யோசிச்சு எழுதியதைப்போல ஒரு பிரமிப்பை ஏற்படுத்திட்டீங்க

 13. தமிழ்நெஞ்சம் சாரு… நன்றி ……..

  இப்ப தான பிளாக்’கன்’ ஆரம்பிச்சிருக்கான்… போகப் போக பாருங்க பட்டைய கிளப்புவான்…

 14. good style!!!!!!!

 15. senthil சாரு… நன்றி……..

 16. சூப்பர் கலக்கிட்டீங்க போங்க!
  அடுத்தவனுங்க வயித்ததாங்க..
  பக்காவா எழுதுரீங்க.. தொடர்ந்து எழுதுங்கள்!
  நா ஃபாலோ பண்றேன், நம்ம பக்கங்களுக்கும்..வாங்க!

 17. கலையரசன் சாரு… நன்றி……..

  இப்ப தான பிளாக்’கன்’ ஆரம்பிச்சிருக்கான்… போகப் போக பாருங்க பட்டைய கிளப்புவான்…

 18. நீங்க பயங்கர டெர்ரர் ஆனா ஆசாமி போல…

 19. //என்னடா நேத்து வந்த இவன் இம்புட்டு ஓவரா பேசுறான் யின்ன நினைக்கிறீங்களா?

  நினைச்சுக்குங்க… அதுக்கு யின்ன இப்போ?

  //

  -:)

  நம்ம கடையாண்ட வந்து பாத்துட்டு கருத்து சொல்லுங்க -:)

 20. ok , Ctrl+c, Ctrl+V . ok done…

 21. வாவ்.. பின்றிங்களே தலைவா.. ஆனாலும் இவ்ளோ தைரியமான ஒருத்தரை ப்ளாக்ல பார்த்ததே இல்லை. இனி பல பேரு ஆட்டம் அடங்கும்னு நினைக்கிறேன். உங்க உக்கிரத்தை குறைச்சிக்காதிங்க ப்ளாக்கன் சார்.

 22. கிளபுங்க.. கிளப்புங்க. அதைத்தானே எதிர்ப்பார்க்கிறோம்.

  //
  தமிழ்நெஞ்சம் சாரு… நன்றி ……..

  இப்ப தான பிளாக்’கன்’ ஆரம்பிச்சிருக்கான்… போகப் போக பாருங்க பட்டைய கிளப்புவான்

 23. சூடான இடுகை

 24. முதல்ல தப்பில்லாம ஒழுங்கா தமிழ்ல எழுத ( தட்டச்சு செய்ய ) கத்துக்குங்க. அப்புறம் மத்த ப்ளாகர்களை குத்தம் சொல்லலாம்…. :))

  • ஸ்ரீனி சாரே நன்றி…..

   மக்களுக்கு தேன் Traffic Rules. Traffic Police-க்கு கிடையாது . அதுபோல பிளாக்’கன்’ க்கு எந்த Rules -ம் கிடையாதுன்கோ சாரு…………

 25. பதிவுலகின் விடிவெள்ளி, புரட்டு பதிவுகளை புடுங்க வந்த புரட்சி புயல் பிளாக்கன் அவர்களுக்கு வணக்கம்.

  🙂 🙂 🙂 🙂 🙂 (ctrl+c , ctrl+v)
  🙂 🙂 🙂 🙂 🙂 (ctrl+c , ctrl+v)
  🙂 🙂 🙂 🙂 🙂 (ctrl+c , ctrl+v)
  🙂 🙂 🙂 🙂 🙂 (ctrl+c , ctrl+v)

 26. mmmmmmmmmmmmmmmm

 27. ok

 28. ayya
  ungal kumuralai nan ettrukolkiren anal Ctrl+C, Ctrl+V edru solli neengal neraya perai kevalamag ninaika koodathu.karanam oru aluvalagathil velai saium nabaruku Ctrl+C, Ctrl+V pothumanathu.yaro plog pannurathappa vachi intha korai sollakoodathu.Ctrl+C, Ctrl+V, velaiyil evvalavu mukkiyamana onru enbathu ungaluku therium enru ninaikiren.nan oru malayali en ucharipil thavaru irunthal ennai mannikavum.

  • jayakumar சாரே……

   உங்கள் வருகைக்கு நன்றி………

  • jayakumar சாரே……..

   பிளாக்கன் குறிப்பிட்ட விஷயங்கள் எல்லாமே பிளாக் பதிவர்களுக்குத் தான். அதுவும் தவறாக அடுத்தவருடைய உழைப்பை திருடும் நன்பர்களுக்குத்தானே தவிர, அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு அல்ல… அலுவலக பணிகளை செய்து முடிக்க ஷாட் கட் தான் ரொம்ப முக்கியம்… என்பது பிளாக்கனுக்குத் தெரியும். நீங்கள் தவறாக புரிந்துள்ளீர்கள்…

   உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள், நீங்கள் ஒரு மலையாளி என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.. நாமெல்லாம் இந்தியன் தானே…. (பிளாக்கன் அன்னியனும் கூட)

   நன்றி
   பிளாக்கன்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: